மைக்கேல்பட்டி ராஜா

2021இல் வெளியான தமிழ் திரைப்படம்

மைக்கேல்பட்டி ராஜா (Michaelpatty Raja) 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும்.[1] பிரான்சிஸ். எஸ் இயக்கிய இப்படத்தை ஸ்பெல்பவுண்ட் பிலிம்ஸ் இன்க் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் நிகேஷ் ராம் , பெர்லீன் பெசானியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராஜேந்திரன், கோவை சரளா , தம்பி ராமையா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 19 மார்ச் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[2][3]

மைக்கேல்பட்டி ராஜா
இயக்கம்பிரான்சிஸ் எஸ்
தயாரிப்புநிகேஷ் ராம்
கதைபிரான்சிஸ் எஸ்
இசைசுதீப் பலநாட்
நடிப்புநிகேஷ் ராம்
பெர்லீன் பெசானியா
இராசேந்திரன்
ஒளிப்பதிவுமனோஜ் பிள்ளை
படத்தொகுப்புராஜா முகமது
கலையகம்ஸ்பெல்பவுண்ட் பிலிம்ஸ் இன்க்
விநியோகம்ஸ்பெல்பவுண்ட் பிலிம்ஸ் இன்க்
வெளியீடுமார்ச்சு 19, 2021 (2021-03-19)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

தயாரிப்பு தொகு

இந்த படம் 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரபு தாகூ என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்டது. பிரான்சிஸ் அறிமுக இயக்குனராகவும், நிகேஷ் ராம் முன்னணி நடிகராகவும் அறிவிக்கப்பட்டனர். 2012இல் நடந்த உண்மையான நிகழ்வுகளால் படம் ஓரளவு ஈர்க்கப்பட்டது.[4] மைக்கேல்பட்டி ராஜா என்ற தலைப்பு இறுதி செய்யப்படுவதற்கு முன்பு "மைக்கேல்பட்டி ராசாவும் துபாய் ரோஸாவும்" என பெயரிடப்பட்டது.

ஏப்ரல் 2017 இல், தயாரிப்பாளர்கள் துருக்கிய நடிகை பெர்காசர் கோரல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்தனர். ஆனால் இறுதியில் அவர் நடிக்கவில்லை.[5][6] பின்னர் அவருக்கு பதிலாக இந்திய நடிகை பெர்லீன் பெசானியா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[7] இந்தப் படம் பெரும்பாலும் துபாயில் படமாக்கப்பட்டது. துபாயை தளமாகக் கொண்ட பல அரபு, பாக்கித்தான் நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.[8]

வெளியீடும் வரவேற்பும் தொகு

இந்த படம் 19 மார்ச் 2021 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[9]

மாலை மலர் செய்தித்தாளின் விமர்சகர் படத்திற்கு கலவையான விமர்சனத்தை அளித்தார்.[10] 'அர முரசு' செய்தி தளத்தின் விமர்சகர் முரளி படத்தைப் பற்றி "வேடிக்கை" என்று குறிப்பிட்டார்.[11]

மேற்கோள்கள் தொகு

  1. "Michaelpatty Raja | மைக்கேல்பட்டி ராஜா".
  2. "மைக்கேல்பட்டி ராஜா - Dinakaran Cinema News". cinema.dinakaran.com.
  3. "Michaelpatty Raja - Times of India". The Times of India.
  4. "உண்மை சம்பவத்தை தழுவி". Dinamani.
  5. Subramanian, Anupama (12 April 2017). "Turkish star Berguzar Korel forays into Kollywood town". Deccan Chronicle.
  6. "Turkish actress forays into K'town". The New Indian Express.
  7. "மைக்கேல்பட்டி ராஜா". dinamalarnellai.com. Archived from the original on 2021-10-20. பார்க்கப்பட்ட நாள் 2021-10-20.
  8. "Arabian tales". 9 March 2021.
  9. "சிறிய படங்களே இன்று ரிலீஸ் | Today small budget movies only released". தினமலர் - சினிமா. 19 March 2021.
  10. "தொல்லை கொடுக்கும் பேய்... தப்பிக்க முயலும் நாயகன் - மைக்கேல்பட்டி ராஜா விமர்சனம்". maalaimalar.com. 21 March 2021.
  11. "தொல்லை கொடுக்கும் பேய்; தப்பிக்க முயலும் நாயகன்; மைக்கேல்பட்டி ராஜா விமர்சனம்". 23 March 2021. Archived from the original on 24 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 7 பிப்ரவரி 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்பட்டி_ராஜா&oldid=3709742" இலிருந்து மீள்விக்கப்பட்டது