வி. ரவிச்சந்திரன்

இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்

விசுவநாதன் ரவிச்சந்திரன் ( வேணு ரவிச்சந்திரன் என்றும் அழைக்கப்படுகிறார்)[1] என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகத்தர் ஆவார். இவர் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனரும், உரிமையாளரும் ஆவார்.[2] இவரது நிறுவனம் முன்பு ஆஸ்கார் பிலிம்ஸ் என்று அழைக்கப்பட்டது.[3] ரவிச்சந்திரன் தனது திரைப்படத் தயாரிப்பு வாழ்கையை 1998 ஆம் ஆண்டில் காதலுக்கு மரியாதை படத்தின் இணை தயாரிப்பாளராக ஆனதில் இருந்து தொடங்கினார். இவர் பல பெரிய அளவிலான தமிழ் மொழித் திரைப்படங்களைத் தயாரித்தார். மேலும் தென்னிந்தியா முழுவதும் பல ஆங்கிலப் படங்களை விநியோகிக்கித்தார்.

வி. ரவிச்சந்திரன்
பிறப்புவேலூர், தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்ஆஸ்கார் ரவிச்சந்திரன்
வேணு ரவிச்சந்திரன்
பணிதிரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1978–தற்போது

துவக்ககால வாழ்க்கை

தொகு

இவர் வேலூரில் பிறந்தார். ஊரிசு கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். இவரது சகோதரர்கள் சிறிய தயாரிப்பு நிறுவனங்களான செலிபிரிட்டி பிக்சர்ஸ், விஸ்வாஸ் பிக்சர்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். வேலூரில் ஒரு முன்னணி விநியோகத்தரின் மகன் என்பதால் இவர் தன் 16 வயதிலிருந்தே படங்களை விநியோகிக்கத் தொடங்கினார்.

தொழில்

தொகு

திரைப்பட தயாரிப்பாளராக தடம் பதிப்பதற்கு முன்பு, ரவிச்சந்திரன் 1970 களின் பிற்பகுதியிலிருந்து தமிழ் திரைப்படத்துறையில் ஒரு முன்னணி திரைப்பட விநியோகத்தராக இருந்தார். மேலும் தமிழ்நாடு முழுவதும் ஜாக்கி சான் படங்களை விநியோகத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தார்.[4] ரவிச்சந்திரன் சங்கிலி முருகனுடன் இணைந்து தயாரித்த ஃபாசிலின் காதல் நடகத் திரைப்படமான காதலுக்கு மரியாதை (1997) மூலம் திரைப்படத் தயாரிப்பாளராக அறிமுகமானார். படத்தின் மலையாள பதிப்பை முதலில் தயாரிக்க ஃபாசில் இவருக்கு வாய்ப்பளித்தாலும், ரவிச்சந்திரன் தனது முதல் தயாரிப்பு தமிழில் இருக்க வேண்டும் என்பதால் அதை மறுத்துவிட்டார். இந்தத் திரைப்படம் அந்த ஆண்டின் மிகவும் வெற்றிகரமான படங்களில் ஒன்றாக மாறியது. அதே நேரத்தில் இவரது இரண்டாவது தயாரிப்பாக, விக்ரமனின் குடும்ப நாடகப் படமான வானத்தைப் போல (2000), வணிகரீதியாக வெற்றியைப் பெற்றது.[4] இவரது மூன்றாவது மற்றும் நான்காவது படங்களான, எழிலின் குடும்ப நாடகப்படமான பூவெல்லாம் உன் வாசம் (2001) மற்றும் சசியின் காதல் திரைப்படமான ரோஜாக்கூட்டம் (2002) ஆகியவை, மிகவும் இலாபகரமான படங்களாக இருந்தன.

2012 ஆம் ஆண்டில், ரவிச்சந்திரன் மற்றும் இயக்குநர் சங்கர் ஆகியோர் விக்ரம் நடித்த காதல் பரபரப்பூட்டும் படமான (2015) படத்தின் வேலைகளைத் தொடங்கினார். எல்லா காலத்திலும் மிகவும் பொருட் செலவில் எடுக்கபட்ட தமிழ் படங்களில் ஒன்றாக படத்தை எடுக்கும் முயற்சியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு அதை முடிக்க மூன்று ஆண்டுகள் ஆனது.[5] அதனைத் தொடர்ந்து அப்படத்தின் இசை வெளியீட்டு வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு ஆர்னோல்டு சுவார்செனேகர் தலைமை விருந்தினராக அழைத்து வரப்பட்டார். அதன் பிறகு சில காலத்தில் வெளியாகி, லாபகரமான படமாக மாறியது.[6]

ஊடகங்களில்

தொகு

ரவிச்சந்திரன் தன்னை ஒளிப்படங்கள் எடுப்பதைத் தவிர்கிறார். தனது படங்களின் விளம்பர நிகழ்வுகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்க விரும்புகிறார். Behindwoods.com, உடனான ஒரு நேர்காணலில் தனது திருமணத்தில் ஒளிப்படக் கலைஞர்கள் யாரும் இருக்கவில்லை என்றும், குடும்ப ஒளிப்படங்களில், தன் மனைவி மட்டுமே தன குழந்தைகளுடன் தோன்றுவார் என்றும் தெரிவித்தார்.[5]

திரைப்படவியல்

தொகு

தயாரிப்பு

தொகு
ஆண்டு தலைப்பு மொழி குறிப்புகள்
1997 காதலுக்கு மரியாதை தமிழ் இணை தயாரிப்பாளர்
2000 வானத்தைப் போல தமிழ்
2001 பூவெல்லாம் உன் வாசம் தமிழ்
2002 எழுமலை தமிழ்
ரோஜாக்கூட்டம் தமிழ்
ரமணா தமிழ்
என் மன வானில் தமிழ்
2003 ஜே ஜே தமிழ்
மனசெல்லாம் தமிழ்
2004 தென்றல் தமிழ்
2005 அந்நியன் தமிழ்
2006 பாரிஜாதம் தமிழ்
தலைநகரம் தமிழ்
டிஷ்யூம் தமிழ்
ரெண்டு தமிழ்
2007 மருதமலை தமிழ்
உன்னாலே உன்னாலே தமிழ்
பச்சைக்கிளி முத்துச்சரம் தமிழ்
2008 தசாவதாரம் தமிழ்
வாரணம் ஆயிரம் தமிழ்
2009 ஆனந்த தாண்டவம் தமிழ்
2011 லீலை தமிழ்
லக்கி ஜோக்கர்ஸ் மலையாளம்
வேலாயுதம் தமிழ்
2013 மரியான் தமிழ்
2014 வல்லினம் தமிழ்
திருமணம் எனும் நிக்காஹ் தமிழ்
2015 தமிழ்
பூலோகம் தமிழ்
2018 விஸ்வரூபம் 2
விஸ்வரூப் 2
தமிழ்
இந்தி
இணை தயாரிப்பாளர்

விநியோகம்

தொகு
ஆண்டு படம்
1978 டிரங்கன் மாஸ்டர்
1982 டிராகன் லார்ட்
பர்ஸ்ட் பிளட்
1983 பிராஜக்ட் ஏ
வின்னர்ஸ் அண்ட் சின்னர்ஸ்
1984 வீல்ஸ் ஆன் மீல்ஸ்
1985 போலிஸ் ஸ்டோரி
ராம்போ: பர்ஸ்ட் பிளட் II
தி எமரால்டு பாரஸ்ட்
தி புரொடக்டர்
1986 ஆர்மர் ஆப் காட்
1987 பிரிடேட்டர்
பிராஜக்ட் ஏ II
1988 பிளட்ஸ்போட்
போரிஸ் ஸ்டோரி 2
ராம்போ III
1989 கிக்பொக்சர்
1990 லயன்ஹாட்
டோட்டல் ரீகால்
1991 ஆர்மராப் காட் II: ஆபரேசன் கோண்டர்
டபிள் இம்பாக்ட்
ஒன்ஸ் அப்பான்ய டைம் இன் சைனா
டெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே
1992 ஒன்ஸ் அப்பான்ய டைம் இன் சைனா II
போலிஸ் ஸ்டோரி 3: சூப்பர் காப்
டிவின் டிராகன்ஸ்
யுனிவேர்சல் சோல்ட்யர்
1993 சிட்டி ஹண்டர்
கிரைம் ஸ்டோரி
ஜுராசிக் பார்க்
1994 டிராகன் மாஸ்டர் II
ட்ரூ லை
1995 கோல்டன் ஐ
ரம்பிள் இன் தி புரோக்கன்
தண்டர்போல்ட்
1996 பிளாக் மாஸ்க்
போலிஸ் ஸ்டோரி 4: ஃபர்ஸ்ட் ஸ்ட்ரைக்
தி குயிஸ்ட்
1997 அனகோண்டா
டபுள் டீம்
மிஸ்டர். நைஸ் கைய்
1998 ரஷ் ஹவர்
ஹூ ஆம் ஐ?
1999 கோர்ஜஸ்
யூனிவர்சல் சோல்ஜர்: தி ரிட்டன்
2000 ஷாங்காய் நூன்
2001 தி ஆக்சிடன்சல் ஸ்பை
ரீபிளேசண்ட்
ரஷ் ஹவர் 2
தி மம்மி ரிட்டன்ஸ்
2002 ஹீரோ
2003 ஷாங்காய் நைட்ஸ்
தி மெடாலியன்
தி ஆர்டர்
தி டிவின் எஃபக்ட்
2004 மிராக்கல்
2007 ஹிட்மேன்
இசுபைடர்-மேன் 3
2008 குங் பூ பாண்டா
2010 தி எக்பேண்டபிள்ஸ்
தி கராத்தே கிட்
மாஸ்கோவின் காவிரி
2012 தி அமேசிங் இசுபைடர்-மேன்
ஸ்கைஃபால்
2013 மை லக்கி ஸ்டார்
2014 இன்ட்டு தி ஸ்ட்டார்ம்
2015 பியூரியஸ் 7
ஜுராசிக் வேர்ல்ட்
சான் ஆன்ட்ரியாஸ்
அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்
மேட் மேக்ஸ்: புயூரி ரோட்

மேற்கோள்கள்

தொகு
  1. "'The snob factor's gone'". telegraphindia.com (in ஆங்கிலம்). 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2023-07-26.
  2. Viswanathan Ravichandran corporate information - http://corporatedir.com/officer/02175468 பரணிடப்பட்டது 30 அக்டோபர் 2014 at the வந்தவழி இயந்திரம் Profile at Corporate Directory
  3. cinemania (2021-07-04). "The shifting power dynamics in the Tamil film industry in the last two decades". CINEMANIA (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 5 July 2022. பார்க்கப்பட்ட நாள் 2023-01-13.
  4. 4.0 4.1 "Internet Archive Wayback Machine". 23 August 2004. Archived from the original on 23 August 2004. {{cite web}}: Cite uses generic title (help)
  5. 5.0 5.1 "An interview with the producer of 'I', Aascar Films Ravichandran". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
  6. "Arnold Schwarzenegger: 'I' event one of the best I have seen". 24 September 2014. Archived from the original on 25 October 2015. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ரவிச்சந்திரன்&oldid=4162559" இலிருந்து மீள்விக்கப்பட்டது