மேட் மேக்ஸ்: புயூரி ரோட்
மேட் மேக்ஸ்: புயூரி ரோட் (ஆங்கில மொழி: Mad Max: Fury Road) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஆஸ்திரேலிய நாட்டு அதிரடி திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ஜார்ஜ் மில்லர் என்பவர் இயக்க, டோக் மிட்செல், ஜார்ஜ் மில்லர் மற்றும் பி.ஜே. வொடேன் தயாரித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் டோம் ஹார்டி, சார்லீசு தெரன், நிக்கோலசு ஹோல்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
மேட் மேக்ஸ்: புயூரி ரோட் | |
---|---|
இயக்கம் | ஜார்ஜ் மில்லர் |
தயாரிப்பு |
|
கதை |
|
இசை | ஜுன்கி எக்ஸ்எல் |
நடிப்பு | |
கலையகம் |
|
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | மே 15, 2015 |
நாடு | |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $150 மில்லியன்[2] |
மொத்த வருவாய் | $366.3 மில்லியன் |
இந்தத் திரைப்படம் மே 15ஆம் திகதி வெளியானது. இந்த திரைப்படத்தை வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்ததது.
நடிகர்கள்
தொகு- டோம் ஹார்டி
- சார்லீசு தெரன்
- நிக்கோலசு ஹோல்ட்
- ஹக் கீய்ஸ்-பைரன்
- நாதன் ஜோன்ஸ்
- ரிலே கியோ
- அபே லீ கெர்ஷா
- கர்ட்னி ஈடொன்
- ஜோஷ் ஹெல்மன்
- ஜான் ஹோவார்ட்
- ரிச்சர்ட் கார்ட்டர்
- மேகன் கேல்
- அங்குஸ் சாம்சன்
- ஜாய் ஸ்மிதர்ஸ்
நடிகர்களின் பங்களிப்பு
தொகுநாயகன் மேக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டோம் ஹார்டி வில்லன்களிடம் சிக்கும் காட்சிகளிலும், நாயகிக்காக உதவும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். வில்லன்களிடம் தப்பிப் பிழைக்க, ப்யூரியோசாவின் உதவி தேவை என்பதால் மேக்ஸ் அவர்களுடன் இணைந்து கொள்கிறான். மனிதனின் உயிர் வாழும் ஆசைக்கு ஒரு உதாரணமான மேக்சின் கதாப்பாத்திரத்தைக் எடுத்துக் கொள்ளலாம்.
ப்யூரியோசாக வரும் சார்லீசு தெரன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். இப்படம் ஒரு ஹீரோயின் படம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் அமைந்துள்ளது. படத்தையே இவர்தான் சுமந்து செல்கிறார். இவருடன் ஐந்து பெண்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
படத்தில் நக்ஸ் எனும் மிகவும் சுவாரசியமான ‘வார் பாய்’ கதாப்பாத்திரம் ஒன்று வருகிறது. நிக்கோலசு ஹோல்ட் என்பவர் இக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். தன் உயிரை மாய்த்து ப்யூரியோசாவைத் தடுக்க நினைப்பது, வாகனத்தில் தடுமாறி விழுந்து ஜோவிடம் திட்டு வாங்குவது என ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.
திரைப்படத்தின் சிறப்பு அம்சங்கள்
தொகுஇப்படத்தில் வரும் வினோதமான வண்டிகள் மற்றும் கார் சேஷிங் காட்சிகள் ரசிகர்களுக்கு சுவாரசியத்தை கொடுத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக நாயகி ஓட்டும் வாகனமான 18 சக்கரங்கள் கொண்ட வார் ரிக், படத்தில் ஒரு கதாப்பாத்திரம் போலவே வருகிறது.
பாலைவனத்திலேயே முழு படத்தையும் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஜார்ஜ் மில்லர். இப்படத்தில் நீர் ஆதாரத்தை யார் கையகப்படுத்துகின்றனரோ, அவர்கள்தான் எதிர்காலத்தில் மற்றவர் மீது அதிகாரம் செலுத்த முடியுமெனத் தெளிவாகச் சித்தரிக்கிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Mad-Max-Fury-Road - Trailer - Showtimes". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/movies/movie/439675/Mad-Max-Fury-Road/overview. பார்த்த நாள்: 8 August 2014.
- ↑ Sperling, Nicole (7 July 2014). "Drive Like Hell". Entertainment Weekly. Archived from the original on 13 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 August 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)