லீலை (2012 திரைப்படம்)

லீலை (Leelai) ஆன்ரூ லூயிஸ் இயக்கத்தில், 2012 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ரமேஷ் பாபு தயாரிப்பில், சதிஷ் சக்ரவர்த்தி இசை அமைப்பில், 27 ஏப்ரல் 2012 ஆம் தேதி வெளியானது. ஷிவ் பண்டிட், மானசி பரேக், சந்தானம் (நடிகர்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1]

நடிகர்கள்தொகு

ஷிவ் பண்டிட், மானசி பரேக், சந்தானம், சுஹாசினி ராஜு, மாயா, விபா நடராசன், லட்சுமி ராமகிருஷ்ணன்.

கதைச்சுருக்கம்தொகு

மலர், மோனா, காயத்ரி ஆகிய மூன்று தோழிகளும் ஒரே கல்லூரியில் பயின்று வருகின்றனர். மலர் (மானசி) வேண்டாம் என்று கண்டித்தும், மோனா கார்த்திக்கை (ஷிவ் பண்டிட்) காதல் செய்தாள். அதனால், மலருக்கும் கார்த்திக்கிற்கும் மோதல் ஏற்படுகிறது. பின்னர், மோனாவும் காரத்திக்கும் பிரிய நேரிடுகிறது. பின்னர், காயத்திரியும் கார்த்திக்கும் காதல் செய்தனர். அதையும் மலர் கண்டித்தாள். பின்னர், காயத்திரி-கார்த்திக் காதல் முறிந்தது.

பல ஆண்டுகள் கழித்து, கார்த்திக்கும் மலரும் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்தனர். கார்த்திக்கின் லீலைகளை மன்னிக்காத மலரிடம், தன் பெயர் சுந்தர் என்று பொய் சொல்லி ஆள் மாறாட்டம் செய்கிறான் கார்த்திக். மலர் சுந்தரை விரும்புகிறாள். மலரின் தோழி சுஜாவிற்கு இந்த ஆள் மாறாட்டம் குறித்து தெரிய வருகிறது. இறுதியில், கார்த்திக் - மலர் காதலுக்கு என்னவானது என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவுதொகு

இந்த் திரைப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் சதிஷ் சக்ரவர்த்தி ஆவார்.[2] மேலும், இரண்டு பாடல்களுக்கு அவர் ஆசிரியராகவும் இருந்தார்.[3]

தயாரிப்புதொகு

2008 மே மாதம் துவங்கிய படப்பிடிப்பு, தயாரிப்பு தாமதங்களை தாண்டி, 27 ஏப்ரல் 2012 அன்று வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.[4][5] ஆன்ரூ லூயிஸ் லீலையின் கதையை சொல்லி இரண்டு மாதத்திற்கு பிறகு, ரவிச்சந்திரன் தயாரிக்க ஒப்புக்கொண்டார்.[6]

வரவேற்புதொகு

இந்தப் படம் பெரும்பாலும் நல்ல விமர்சனத்தைப் பெற்றது. "விடுமுறை நாட்களில், குடும்பத்துடன் பார்க்கத் தக்க நகைச்சுவை நிறைந்த படம்" என்று விமர்சனம் செய்யப்பட்டது.[7]

மேற்கோள்கள்தொகு

  1. "http://www.hindu.com". மூல முகவரியிலிருந்து 2009-09-14 அன்று பரணிடப்பட்டது.
  2. "http://www.hindu.com". மூல முகவரியிலிருந்து 2012-11-10 அன்று பரணிடப்பட்டது.
  3. "http://www.hindu.com". மூல முகவரியிலிருந்து 2009-06-29 அன்று பரணிடப்பட்டது.
  4. "http://www.indianexpress.com".
  5. "http://www.indiaglitz.com".
  6. "http://www.hindu.com". மூல முகவரியிலிருந்து 2008-11-10 அன்று பரணிடப்பட்டது.
  7. "http://www.behindwoods.com".
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீலை_(2012_திரைப்படம்)&oldid=3256860" இருந்து மீள்விக்கப்பட்டது