சுனந்தா (பாடகி)

இந்தியத் திரைப்படப் பின்னணி பாடகி

சுனந்தா (Sunanda) ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணி பாடகி ஆவார். இவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். 1983 இல் சென்னைக்குச் செல்வதற்கு முன் கேரளாவில் தனது முதல் பட்டப்படிப்பை முடித்தார். கர்நாடக இசையில் பயிற்சி பெற்றார். தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிமுகமானார். அவர் புதுமைப்பெண் திரைப்படத்தில் தனது முதல் பாடலை வழங்கினார். [1]

சுனந்தா
பிறப்புகேரளா, இந்தியா
பணிஇந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
செயற்பாட்டுக்
காலம்
1984–1995

தொழில் தொகு

சுனந்தா தமிழில் பின்னணி பாடுவதற்கு முன், ஒரு மலையாள ஆவணப்படத்திற்காக கர்நாடக பாடல்களையும் சுலோகங்களையும் பாடினார். இவரது முதல் திரைப்படப் பாடல் வெற்றி பெற்றது. மேலும் இவர் 1980 மற்றும் 1990 களில் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பல வெற்றிப் பாடல்களைப் பாடினார்.[2] தனிப்பட்ட காரணங்களால் பல வருடங்களாக இவரால் தொடர்ந்து பின்னணி பாட முடியவில்லை.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனந்தா_(பாடகி)&oldid=3323293" இருந்து மீள்விக்கப்பட்டது