எம். ஆர். ஆர். வாசு
எம். ஆர். ஆர். வாசு ஒரு தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகர். எம். ஆர். ராதாவுக்கும் தனலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு ராதாரவி என்ற சகோதரனும், ரசியா, ராணி, ரதிகலா என்று மூன்று சகோதரிகளும் உள்ளனர். இவருடைய தந்தையின் இன்னொரு மனைவியான கீதா ராதாவிற்கு பிறந்தவர்கள் நிரோஷா, ராதிகா, மோகன் ராதா ஆவர்.
வாசு நாடக கம்பேனி நடத்தி வந்தார். அதில் ராதாரவியும் நடித்திருக்கிறார். என் விழிகளில் என் தந்தை என்ற பெயரில் எம். ஆர். ராதாவினைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
எம்.ஆர்.ஆர்.வாசு நடித்துள்ள திரைப்படங்கள்தொகு
- நாலும் தெரிந்தவன்.
- பட்டிக்காடா பட்டணமா
- சக்கரம்
- அவன்தான் மனிதன்