தென்னவன் (நடிகர்)
தென்னவன் என்பவர் இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் திரைப்படங்களில் துணை வேடங்களில் தோன்றியுள்ளார். இவர் பாரதிராஜாவின் என் உயிர்த் தோழன் (1990) படத்தில் அறிமுகமான பிறகு , ஜெமினி (2002) விருமாண்டி (2004) ஜே ஜே (2003) ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.
தென்னவன் | |
---|---|
பிறப்பு | இரமேஷ் துரைசாமி 16 நவம்பர் 1966 தமிழ்நாடு, கோயம்புத்தூர் |
மற்ற பெயர்கள் | கை தென்னவன் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1990 - தற்போது வரை |
தொழில்
தொகு1984 ஆம் ஆண்டில் கோவையில் சர்வஜனா உயர்நிலைப் பள்ளியில் படித்த பிறகு, தென்னவன் திரைப்படத்தில் நடிப்பதற்காக சென்னை சென்றார். பாரதிராஜாவின் 1990 ஆம் ஆண்டு வெளியான என் உயிர்த் தோழன் திரைப்படத்தில் தென்னவன் அறிமுகமானார். அதில் இவர் இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.[1] சரணின் ஜெமினி (2002) படத்தில் கை என்ற பாத்திரத்தில் நடித்தார். இதில் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார், அதன் பின்னர் கை தென்னவன் என்று படங்களில் இவரது பெயர் குறிப்பிடப்பட்டது. கமல்ஹாசன் விருமாண்டியில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இவரைத் தேர்ந்தெடுத்தார், இதில் இவருக்கு நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்தன.[2]
தென்னவன் பின்னர் ஒரு சோதனை திரைப்படமான ஆயுள் ரேகை (2005) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மனச்சோர்வின் விளிம்பில் உள்ள ஒரு மனிதனை சித்தரித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.[3] பின்னர் இவர் சுந்தரபாண்டியன் (2012) மற்றும் நான் தான் பாலா (2014) உள்ளிட்ட படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.
திரைப்படவியல்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1990 | என் உயிர்த் தோழன் | ||
1992 | முதல் குரல் | ||
1995 | வேலுசாமி | ||
2002 | ஜெமினி | கை | |
2003 | ஜே ஜே | ||
2003 | காலாட்படை | பிரியாவின் மாமா | |
2003 | திவான் | ||
2004 | எதிரி | காவல் ஆய்வாளர் தனபதி | |
2004 | ஜோர் | ||
2004 | விருமாண்டி | கொண்டராசு | |
2004 | 7ஜி ரெயின்போ காலனி | வக்கிடங்கு ஊழியர் | |
2005 | ஆயுள் ரேகை | கரிகாலன் | |
2005 | சண்டக்கோழி | ||
2006 | புதுப்பேட்டை | செல்வம் | |
2006 | ஆச்சார்யா | கூறுமதி | |
2007 | அம்முவாகிய நான் | மோகன் | |
2007 | கூடல் நகர் | ||
2007 | மணிகண்டா | ||
2008 | கத்திக் கப்பல் | ||
2009 | வைகை | ||
2009 | ஞாபகங்கள் | ||
2011 | இளைஞன் | ||
2011 | வாகை சூட வா | ||
2011 | சதுரங்கம் | ||
2012 | கிருஷ்ணவேணி பஞ்சாலை | ||
2012 | சுந்தர பாண்டியன் | பாண்டி தேவர் | |
2014 | நான் தான் பாலா | காட்டூரான் | |
2014 | ஜிகர்தண்டா | சங்கர் | |
2015 | கிருமி | கிளப் உரிமையாளர் | |
2015 | மாங்கா | ||
2016 | கத்தி சண்டை | ச.ம.உ. சிவஞானம் | |
2016 | யோக்கியன் வர்ரான் சொம்பை எடுத்து வை | ||
2016 | உன்னோடு கை | ||
2017 | உறுதிகொள் | ||
2018 | ஏகாந்தம் | ||
2018 | சண்டக்கோழி 2 | துரை அய்யாவின் மைத்துனன் | |
2019 | பேட்ட | அமைச்சர் தங்கம் | |
2019 | என் காதலி சீன் போடுறா | ||
2021 | இது விபத்து பகுதி |
தொலைக்காட்சி
தொகுஆண்டு | தலைப்பு | பாத்திரம் | அலைவரிசை |
---|---|---|---|
2018 | ஒவியா | முன்னுசாமி | கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி |
2019 | ராசாத்தி | ரசப்பன் | சன் தொலைக்காட்சி |
குறிப்புகள்
தொகு- ↑ "- Kannada News". IndiaGlitz.com. Archived from the original on 2020-04-08. பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.
- ↑ ""Virumaandi"". 23 January 2004 – via www.thehindu.com.
- ↑ "Aayul Regai". Bbthots.com. Archived from the original on 2021-06-24. பார்க்கப்பட்ட நாள் 2020-04-08.