காலாட்படை (திரைப்படம்)

2003 திரைப்படம்

காலாட்படை (Kalatpadai) என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். ஜே. ரமேஷ் இயக்கிய இப்படத்தில் புதுமுகம் ஜெய் மற்றும் வித்யா வெங்கடேஷ் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க ராதாரவி, ஜே லிவிங்ஸ்டன், தலைவாசல் விஜய், நிதின் சத்யா, இராஜசேகர், ஜோதி, தென்னவன், குயிலி ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை, சோழா பொன்னுரங்கம் தயாரித்தார். படத்திற்கான இசையை பரத்வாஜ் அமைத்தார். படம் 2003 சனவரி 15 அன்று வெளியானது [1][2][3][4]

காலாட்படை
இயக்கம்ஜே. ரமேஷ்
தயாரிப்புசோழா பொன்னுரங்கம்
கதைஜே. ரமேஷ்
இசைபரத்வாஜ்
நடிப்புஜெய்
வித்யா வெங்கடேஷ்
ஒளிப்பதிவுடி. சீனு
படத்தொகுப்புரகு பாப்
கலையகம்சோழா கிரியேசன்ஸ்
வெளியீடுசனவரி 15, 2003 (2003-01-15)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

தலைவாசல் (1992), அமராவதி (1993) சாதி சனம் (1997) ஆகிய படங்களைத் தயாரித்த சோழா கிரியேஷன்சின் சோழா பொன்னுரங்கம் படத்தயாரிப்பிலிருந்து நீண்டகாலம் ஒதுங்கி இருந்தார். பின்னர் சோழா பொன்னுரங்கம் தனது புதிய படமாக "கலாட்படை" என்ற படத்தைத் தொடங்கினார். இயக்குனர் செல்வாவிடம் பயிற்சி பெற்ற ஜே. ரமேஸ் கூறிய எட்டு நண்பர்களை மையமாகக் கொண்ட ஒரு இளைஞனின் கதை படத்திற்கு தேர்வு செய்யப்பட்டது. விமானியின் பயிற்சியை முடித்து, விமான நிறுவனத்தில் பணிபுரியத் தயாராக இருந்த புதுமுகம் ஜெய், நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். ஏற்கனவே பஞ்சதந்திரம் (2002) படத்தில் விமானப் பணிப்பெண் பாத்திரத்தில் நடித்திருந்த வித்யா வெங்கடேஷ் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். துணை நடிகர்களாக அருண் ( நிதின் சத்யா ), விஜயகணேஷ், ஆண்டனி (நையாண்டி தர்பார் புகழ்), லிவிங்ஸ்டன், ராதாரவி, ராஜசேகர், கை தென்னவன், ஜோதி, தலைவாசல் விஜய், குயிலி ஆகியோர் நடித்தனர்.[4]

இசை தொகு

திரைப்பட பின்னணி இசை, பாடலிசை ஆகியவற்றை இசையமைப்பாளர் பரத்வாஜ் அமைத்தார். 2003 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் இசைப்பதிவில், காமகோடியன், சினேகன், நியூட்டன், ஜே. ரமேஷ் ஆகியோரால் எழுதப்பட்ட ஒன்பது பாடல்கள் உள்ளன.[5][6][7]

எண் பாடல் பாடகர்(கள்) காலம்
1 "மச்சான் மச்சான்" மோகன் வைத்யா, திமோதி, ரேஷ்மி 4:12
2 "காதல் இன்று தீயாய்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:42
3 "வருது வருது" திப்பு, திமோதி, பாப் ஷாலினி 5:05
4 "மழையோ புயலோ" சீனிவாஸ், பாப் ஷாலினி, கோபிகா பூர்ணிமா 4:58
5 "காகித ஓடம்" விஜய் சங்கர், சிம்சோமராஜ் 2:47
6 "இமைகளின் ஓரம்" பரத்வாஜ், ரேஷ்மி 5:05
7 "மனிதா மனிதா" கிருஷ்ணராஜ் 5:08
8 "பெண்களை நம்பாதே" தீமோத்தேயு 2:40
9 "ராமா ராமா" ரேஷ்மி 2:04

வெளியீடு தொகு

இந்த படம் முதலில் 2002 நவம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் இது 2003 சனவரி 15க்கு ஒத்திவைக்கப்பட்டது, இது தைப்பொங்கல் திருவிழாவை ஒட்டி வெளியானது. இப்படம் தூள், சொக்கத்தங்கம், வசீகரா, அன்பே சிவம் உள்ளிட்ட ஆறு படங்களுடன் வெளியானது.[8][9]

வணிகம் தொகு

இப்படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[10]

மேற்கோள்கள் தொகு