7ஜி ரெயின்போ காலனி

செல்வராகவன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

7ஜி ரெயின்போ காலனி (7G Rainbow Colony) 2004 ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா அறிமுகமானார்.[1] சோனியா அகர்வால் நடித்திருந்த இப்படத்தை எழுதி இயக்கியவர் செல்வராகவன்.[2] யுவன் ஷங்கர் ராஜாவின் இசையுடன் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் இத்திரைப்படம் உருவானது.

7 ஜி ரெயின்போ காலனி
இயக்கம்செல்வராகவன்
தயாரிப்புஏ. எம். ரத்னம்
கதைசெல்வராகவன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புரவி கிருஷ்ணா
சோனியா அகர்வால்
சுமன் ஷெட்டி
வெளியீடு15 அக்டோபர், 2004
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

வகை தொகு

உண்மைப்படம் / மசாலாப்படம்

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

வேலையில்லாமல் நண்பர்களுடன் சுற்றித்திரியும் இளைஞனான ரவி கிருஷ்ணா அவன் தங்கியிருக்கும் தொகுப்பு குடியிருப்பு-க்கு குடிவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவரைக் ( சோனியா அகர்வால் ) காதல் கொள்கின்றார். பல முறை அவரின் விருப்பத்தைத் தெரியப்படுத்த முயற்சிகளும் செய்கின்றார். இவர் பல முறை முயற்சிகள் செய்தும் பொருட்படுத்தாதிருக்கும் அப்பெண்ணிற்கு வீட்டின் மூலம் மாப்பிள்ளை ஒருவனைத் தேர்ந்தெடுக்கின்றார் அவள் தந்தை. திருமணம் நடைபெறுவதற்கு முன்பதாகவே அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள எத்தனிக்கும் மாப்பிள்ளையைத் தடுத்து நிறுத்துகின்றார் ரவி கிருஷ்ணா. பின்னர் அப்பெண்ணும் ரவி கிருஷ்ணாவைக் காதலிக்கின்றார். காதல் ரவி-யை செம்மைப்படுத்துகிறது. பொறுப்புடைய இளைஞனாக மாறுகிறான். பெண்ணின் தாயார் எதிர்க்கிறார். வேறு இடம் குடிபெயர்கின்றனர். பெண், வீட்டில் சிறை செய்யப்படுகின்றாள். பின்னர் தப்பிச் சென்று, ஒரு சுற்றுலா விடுதியில் இருவரும் உடலுறவினையும் கொள்கின்றனர். அதன் பிறகு சிறிய சண்டை காரணமாக தெருவிலிருந்து விலகிச் செல்லும் பொழுது ரவியின் காதலியை வாகனமொன்று மோதி இறக்கின்றார். பின்னர் காதலியின் நினைவுடனேயே வாழ்கின்றார் ரவி.

துணுக்குகள் தொகு

தமிழ்நாட்டில் மட்டும் 92 திரைகளில் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் 7 ஜி பிரிந்தாவன் காலனி என வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பாடல்கள் தொகு

7ஜி ரெயின்போ காலனி திரைப்படமானது யுவன் சங்கர் ராஜா இசையமைப்பினில் பத்து பாடல்களைக் கொண்டுள்ளது.

பாடல் பாடகர்கள்
நினைத்து நினைத்து பார்த்தால் ஷ்ரேயா கோஷல்
கனா காணும் காலங்கள் ஹரிஷ் ராகவேந்திரா, சுல்தான் கான் ,மதுமிதா
நாம் வயதுக்கு வந்தோம் பி. உன்னிகிருஷ்ணன், யுவன் சங்கர் ராஜா ,ஷாலினி,கங்கா
சந்தோசத்தின் இசை இசை கருவிகள்
கண் பேசும் வார்த்தைகள் கார்த்திக்
இது போர்களமா ஹரிஸ் ராகவேந்திரா
கனா காணும் காலங்கள் மதுமிதா,சுல்தான் கான்
ஜனவரி மாதம் குணால் கஞ்சாவாலா, மதன்ஜி
தீம் மியூசிக் இசை கருவிகள்
நினைத்து நினைத்து பார்த்தேன் கிருஷ்ணகுமார் குன்னத்

மேற்கோள்கள் தொகு

  1. Dinamalar (2021-02-17). "மறக்க முடியுமா? - 7ஜி ரெயின்போ காலனி". தினமலர் - சினிமா. பார்க்கப்பட்ட நாள் 2021-06-03.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "7ஜி ரெயின்போ காலனி வெளியான நாள்: மனிதனை உருமாற்றி உயர்த்தும் காதலின் கதை". Hindu Tamil Thisai. Archived from the original on 2020-11-01. பார்க்கப்பட்ட நாள் 2021-06-03.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=7ஜி_ரெயின்போ_காலனி&oldid=3941256" இலிருந்து மீள்விக்கப்பட்டது