ஓவியா (தொலைக்காட்சித் தொடர்)
ஓவியா என்பது 26 நவம்பர் 2018 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 21, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மே 28, 2020 முதல் செப்டம்பர் 3 2020 வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பான இரு நண்பர்களின் வாழ்க்கை கதையை கூறும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடர் ஹிந்தி மொழித் தொடரான உத்தரன் என்ற தொடரை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
ஓவியா | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
உருவாக்கம் | அஹமத் |
எழுத்து | தட்ஷணா ராமமூர்த்தி |
இயக்கம் | சாய் மருது |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 446 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | மெராக்கி பிலிம்ஸ் மெர்க்ஸ் |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ் நாடு |
ஒளிப்பதிவு | கல்யாண் |
தொகுப்பு | ச. மகேஷ் |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 26 நவம்பர் 2018 3 செப்டம்பர் 2020 | –
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | சிந்து பைரவி |
இந்த தொடரை சாய் மருது என்பவர் இயக்க கோமதி பிரியா, குஷி சம்பந்த குமார் மற்றும் ஹர்ஷாலா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இது ஏழை குடுப்பத்தை சேர்ந்த ஓவியாவும் பணக்கார குடுப்பத்தை சேர்ந்த கயாத்திரியும் எப்படி நண்பர்களாக வாழ்கின்றனர் என்பதை விவரிக்கின்றது.[2] இந்த தொடர் 3 செப்டம்பர் 2020 முதல் 446 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
கதைச்சுருக்கம்
தொகுமீனவ குடும்பத்தில் பிறந்த ஓவியா, அவள் 12ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாக தேர்வாகிறாள். அரசு பள்ளியில் படித்து முதல் மாணவியாக தேர்வாவதால் நாடே அவரை கொண்டாடுகிறது. ஆனால் அவர்கள் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
பணக்கார குடும்பத்தை சேர்த்த காயத்திரி, தனக்கு தேவை என்றால் எதையும் அடைய நினைப்பவள். மாறுபட்ட ஆளுமைப்பண்புகளைக் கொண்டிருக்கும் ஓவியா மற்றும் காயத்ரி இருவரும் நண்பர்களாகின்றார். அவர்களது நட்பின் பிணைப்பு சிதைக்கப்படாமல் பாதுகாக்கவும் முயற்சி செய்கிற இரு தோழிகளுக்கிடையே நடக்கும் நிகழ்ச்சிகளின் போராட்டமே இந்த தொடரின் கதை.
நடிகர்கள்
தொகுமுதன்மை கதாபாத்திரம்
தொகு- கோமதி பிரியா (2018-2020) → குஷி சம்பந்த குமார் (2020) - ஓவியா
- சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மீனவர் குடும்பத்தில் ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த பெண் ஓவியா. அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும் அவள், நேர்மைக்காகவும் கனிவான நடத்தைக்காகவும் பலரால் பாராட்டப்படுகிறாள்.
- ஹர்ஷாலா (1-158) → புனிதா பாலகிருஷ்ணன் (159-338) → ஹர்ஷாலா (339-446) - காயத்ரி
- வசதியான குடும்பத்தைச் சேர்ந்த காயத்ரியோ தனது இலக்கு களையும் லட்சியங்களையும் அடைவதற்காக எந்தளவுக்கும் செல்வதற்குத் தயாராக இருப்பதோடு, பிறரைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்பவளாகவும் இருக்கிறாள்.
- சுரேந்தர் சண்முகம் - சூர்யா
- வசதியான குடும்பத்தை சேர்ந்தவன், ஓவியாவை காதலிக்கிறான் ஆனால் இவர்களின் காதல் ஒன்று கூடவில்லை. குடும்பத்தின் நிர்பந்தத்தில் காயத்திரியை திருமணம் செய்ய்கின்றான்.
- கார்த்திக் வாசு - சரவணன்
- சூர்யாவின் தம்பி மற்றும் ஓவியாவின் கணவர்
ஓவியா குடும்பத்தினர்
தொகு- சிந்து சியாம் - அன்பு (ஓவியாவின் தாய்)
- திவ்யா பானு - அறிவழகி (ஓவியாவின் நண்பி)
காயத்ரி குடும்பத்தினர்
தொகு- ராஜ் மித்ரன்
- அரவித் - செல்வம் (மாமா)
- பிரேமி வெங்கட் - திலகவதி (அம்மா)
- ஜீவா ரவி (தந்தை)
சூர்யா & சரவணன் குடும்பத்தினர்
தொகு- அஸ்வின் - (சகோதரன்)
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
தொகுஒளிபரப்பான திகதி | நாட்கள் | நேரம் | அத்தியாயங்கள் |
---|---|---|---|
26 நவம்பர் 2018 - 21 மார்ச் 2020 | 18:30 | 1-373 | |
28 மே 2020 | 19:30 | 374-446 |
மதிப்பீடுகள்
தொகுகீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2018 | 0.34% | 0.95% |
2019 | 0.44% | 0.86% |
2020 | 0.28% | 0.82% |
0.23% | 0.75% |
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஓவியா - கலர்ஸ் தமிழில் புதிய தொடர்". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-07.
- ↑ "கலர்ஸ் தமிழில் புதிய தொடர் ஓவியா". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-26.
வெளி இணைப்புகள்
தொகுகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி மாலை 7:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | ஓவியா (28 மே 2020 - 3 செப்டம்பர் 2020) |
அடுத்த நிகழ்ச்சி |
இதயத்தை திருடாதே (14 பெப்ரவரி 2020 - 21 மார்ச் 2020) |
அம்மன் |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி மாலை 6:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | ஓவியா (26 நவம்பர் 2018 - 21 மார்ச் 2020) |
அடுத்த நிகழ்ச்சி |
வேலுநாச்சி (20 பெப்ரவரி 2018 - 26 சூலை 2018) |
ஸ்ரீ கிருஷ்ணா (28 மே 2020) |