அம்மன் (தொலைக்காட்சித் தொடர்)

அம்மன் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 27 ஜனவரி 2020 முதல் 1 சூலை 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான பக்தி திகில் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரை ஐ. அஹ்மத் என்பவர் தயாரிக்க, ரவி பிரியன் என்பவர் இயக்கியுள்ளார். சக்தி என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை பவித்ரா நடிக்க இவருக்கு ஜோடியாக ஈஸ்வர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அமல்ஜித் என்பவர் நடித்துள்ளார்.[3][4][5][6][7][8][9][10]

அம்மன்
வகைபக்தி
காதல்
நாடகத் தொடர்
எழுத்துசாய் ராம் சிவகுமார்
இயக்கம்ரவி பிரியன் (பகுதி 1-86)
பரமேஸ்வர் (பகுதி 86-1150)
நடிப்பு
 • பவித்ரா
 • அமல்ஜித்
 • ஜென்னிபர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்3
அத்தியாயங்கள்1150
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஐ. அஹ்மத்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தோராயமாக அங்கம் ஒன்று 42–44 நிமிடங்கள் (2021)
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்27 சனவரி 2020 (2020-01-27) –
1 சூலை 2022 (2022-07-01)

தெய்வ சக்தி மூலம் வாக்கு சொல்லும் சக்தி என்ற பெண்ணும், தெய்வ வாக்கை நம்பாத ஊருக்கு புதிதாக வரும் வைத்தியர் இருவரையும் சேர்ந்து வைக்க விதி செய்யும் சதி என்ன என்பது தான் கதை. இந்த தொடர் 27 சனவரி 2020 ஆம் ஆண்டு முதல் மூன்று பருவங்களாக ஒளிபரப்பாகி, 1150 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[11]

பருவங்கள்

தொகு
பர்வம் அத்தியாயங்கள் ஒளிபரப்பு
முதல் ஒளிபரப்பு இறுதி ஒளிபரப்பு
1 887 27 சனவரி 2020 (2020-01-27) 23 அக்டோபர் 2021 (2021-10-23)
2 157 25 அக்டோபர் 2021 (2021-10-25) 19 பெப்ரவரி 2022 (2022-02-19)
3 106 21 பெப்ரவரி 2022 (2022-02-21) 1 சூலை 2022 (2022-07-01)

கதை சுருக்கம்

தொகு

அம்மன் தொடரின் கதை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்ட ஒரு சிறிய நகரப் பெண்ணான சக்தியைச் சுற்றி கதை நகர்கின்றது. எதிர்காலத்தை முன்னறிவிக்கும் அம்மன் அருள் கொண்டு சக்தி என்ற இளம் பெண். இவளின் தனித்துவமான திறமையால் அந்த கிராமமே அம்மனின் அவதாரம் என போற்றி வணங்கி வருகின்றனர். அதே ஊரில் மருத்துவராக இருக்கும் ஈஸ்வர் கிராம மக்களின் மூட நம்பிக்கையை நம்பாத இவன் சக்தி போலித்தனத்தை வெளிக்காட்ட முயற்சிக்கும் தருணத்தின் இருவரும் விதியின் சதியால் காதலிக்கின்றனர். இவர்களின் காதலுக்கு ஊரும் உறவும் ஏற்குமா? இல்லை எதிர்க்குமா? என்பது தான் கதை.

நடிகர்கள்

தொகு

முதன்மை கதாபாத்திரம்

தொகு
 • பவித்ரா - சக்தி
  • அம்மன் அருளால் வாக்கு சொல்லும் பெண். இவளை ஊரே தெய்வமாக பார்த்தாலும் இவள் தங்க கூண்டுக்குழை சிக்கி இருக்கிற கிளி தான் என்பது யாருக்குமே தெரியாது.
 • அமல்ஜித் - ஈஸ்வர்
  • ஒரு வைத்தியர். கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.
 • ஜென்னிபர் - சாரதா
  • இந்த தொடரின் வில்லி, சக்தியின் அக்கா, என்னதான் சக்தியின் சொல்லுக்கு ஊரே கட்டுப்பட்டாலும் இவளின் கண் அசைவுக்கு சக்தியே கட்டுப்படுவாள்.

துணை கதாபாத்திரம்

தொகு
 • ஷாலி - லோகம்மாள்
  • வில்லி கதாபாத்திரம், சக்தி வாக்கு சொன்னால் எல்லாமே பலிக்கும் ஆனால் வாக்கு மட்டும் தான் அவளுடையது நாக்கு இவளுடையது.
 • லாவண்யா - இன்பா
 • ஜீவா
 • ரோசரி
 • பத்மினி
 • அணு சுலேஷ்
 • அவினாஷ் அசோக்[12] - அரவிந்த்
 • சுபா ரக்சா
 • அலெக்சாண்டர்[13]

நேரம் மாற்றம்

தொகு

இந்த தொடர் முதலில் 27 ஜனவரி 2020 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 ஒளிபரப்பாகி, மே 28 2020 முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி, பின்னர் செப்டம்பர் 4 முதல் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

மகாசங்கமம்

தொகு
 • இந்த தொடர் 15 மார்சு முதல் 27 மார்சு 2021ஆம் ஆண்டு மாங்கல்ய தோஷம் என்ற தொடருடன் மகாசங்கமத்தில் ஒளிபரப்பானது. அதை தொடர்ந்து இரண்டாம் தடவையாக 10 மே 2021 முதல் ஒளிபரப்பானது.[14][15][16][17]

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. "New daily soap 'Amman' to premiere soon". timesofindia.indiatimes.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 2. "A new mythology show on TV". timesofindia.indiatimes.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 3. "COLORS Tamil presents a new mythological series – AMMAN". www.auditionform.in. Archived from the original on 2020-01-26. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 4. "அம்மன் - புதிய பக்தி தொடர்". cinema.dinamalar.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 5. "A new mythology show on TV". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்).
 6. "அம்மன் தொடர் 1000 அத்தியாயங்களை நிறைவு செய்தது". cinema.dinamalar.com.
 7. "Amman completes 400 episodes; Amaljith and Pavithra Gowda thank fans". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்).
 8. "Amman completes 300 episodes; Amaljith, Pavithra Gowda and Shubha Raksha thank fans". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்).
 9. "வெற்றிகரமாக 350 எபிசோடுகளை நிறைவு செய்த அம்மன் சீரியல்." tamil.news18.com.
 10. "Amman crosses 700 episodes; team enjoys a celebratory mood". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்).
 11. "3 சீசனை கடந்த அம்மன் சீரியலுக்கு விரைவில் என்ட் கார்டு". tamil.indianexpress.com.
 12. "Actor Avinash Ashok joins the cast of 'Amman'; urges fans to support the show". The Times of India.
 13. "Shubha Raksha and Alexander join Amman; the actors share their excitement". The Times of India.
 14. "Colors Tamil to air Mahasangamam of Mangalya Sandhosham and Amman". bestmediainfo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 February 2022.
 15. "கலர்ஸ் தமிழில் 'மர்ம வாரம்': சீரியல்களில் வர உள்ள புதிய ட்விஸ்டுகள்". tamil.samayam.com. பார்க்கப்பட்ட நாள் 7 February 2022.
 16. "Colors Tamil to air 'Mahasangamam' of its shows Mangalya Sandhosham & Amman". www.exchange4media.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 February 2022.
 17. "மார்ச் 27 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும்...பிரபல நெடுந்தொடர்களின் சங்கமம்". tamil.filmibeat.comlanguage=ta. பார்க்கப்பட்ட நாள் 7 February 2022.

வெளி இணைப்புகள்

தொகு