வேலுநாச்சி (தொலைக்காட்சித் தொடர்)

வேலுநாச்சி என்பது 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகாத்தொடர்.[1] இந்த எல். அபினிந்தன் தொடரை இயக்க சித்ரா , மணிகண்டன், ஜெயராவ், கவிதா போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் பெப்ரவரி 11, 2018 ஆம் ஆண்டு முதல் சூலை 26, வரை திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி 120 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

வேலுநாச்சி
வகைகுடும்பம்
சிலம்பம்
பழிவாங்குதல்
நாடகம்
எழுத்துபுகழேந்தி சிங்காரவேலன்
அருண் பிரகாஷ்
இயக்கம்எல். அபினிந்தன்
நடிப்புசித்ரா
மணிகண்டன்
முகப்பு இசைவிஷ்வா
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
அத்தியாயங்கள்120
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்குஷ்மாவதி
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
தொகுப்புஎஸ்.முருகன் நெமினாதான்
எசக்கிராஜ்
ஓட்டம்தோராயமாக 22-24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்20 பெப்ரவரி 2018 (2018-02-20) –
26 சூலை 2018 (2018-07-26)
Chronology
பின்னர்வந்தாள் ஸ்ரீதேவி (மறுஒளிபரப்பு)

இதுவே சிலம்பப் போட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட முதல் தமிழ்த் தொலைக்காட்சித் தொடர் ஆகும். சிலம்பத்தில் தன்னுடைய தந்தை வழியைப் பின்பற்றி முன்னெடுத்துச் செல்லும் ஒரு வீரமிக்க பெண்ணாக தன்னை மாற்றிக் கொள்ளும் வேலுநாச்சி என்ற இளம்பெண்ணின் உத்வேகக் கதையாகும்.[2][3]

கதைச்சுருக்கம்

தொகு

பாப்பம்பட்டி என்ற கிராமத்தில் சிலம்பக் கூடம் ஒன்று இருக்கிறது. அதில் பெரிய ஆசானாக இருந்த பழனி ஆண்டவருக்கு வயதாகி விட்டதால், சிலம்பக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்ற வல்லரசு என்பவரை புதிய ஆசானாக நியமிக்கிறார். முதலில் நல்லவராக இருந்த வல்லரசு, தன் சிற்றப்பா தயாளனின் தூண்டுதலால் தீயவராக மாறுகிறார். மேலும், அவருடன் சேர்ந்து கொண்டு சிலம்பக் கூடம் இருந்த நிலத்தையும் அபகரிக்க முயல்கிறார். இதனால் கோபமடைந்த பழனி ஆண்டவர், வல்லரசை பெரிய ஆசான் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவிக்கிறார். ஆனால் வல்லரசு, சிலம்பப் போட்டியில் தன்னை ஜெயிப்பவருக்கே பெரிய ஆசானாக இருக்கும் தகுதி உள்ளது என்று கூறி சவால் விடுகிறார். உடனே வேலுநாச்சி, அவரது சவாலை துணிச்சலாக ஏற்றுக் கொள்கிறார். இவ்வாறு வல்லரசு-வேலுநாச்சி இடையே சிலம்பப் போட்டி நடைபெறும் என்று முடிவு செய்யப்படுகிறது. ஆனால் வேலுநாச்சிக்கு பயிற்சி கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதற்கிடையில் வேலுநாச்சி, தன் கிராமத்துப் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிறார்.

சுகந்தி, சிலம்பக் கலையில் கைதேர்ந்தவர் என்று தெரியவருகிறது. மேலும் அவரது அண்ணன், ஒருமுறை செங்குட்டுவனுடன் நடந்த சிலம்பப் போட்டியில் தோல்வி அடைந்ததால் மருந்து குடித்து இறந்து விடுகிறார்.

கதாபாத்திரங்கள்

தொகு
  • சித்ரா - வேலுநாச்சி
  • மணிகண்டன் - அருண்
  • ஜெயராவ் - பழனி ஆண்டவர், பெரிய ஆசானாக இருந்தவர்
  • அன்புமொழி - பாக்கியம், பழனி ஆண்டவரின் மனைவி
  • சீனிவாசன்- வல்லரசு, பெரிய ஆசான்
  • கவிதா- சுகந்தி
  • வெற்றி வேலன்
  • ஷர்வன்

மேற்கோள்கள்

தொகு
  1. Colors Tamil (2018-02-14), வேலுநாச்சி ப்ரோமோ 1 | Colors தமிழ், பார்க்கப்பட்ட நாள் 2018-02-20
  2. "தமிழில் புதிய பொழுது போக்கு தொலைக்காட்சி 'கலர்ஸ்'", Tamil Cine Talk (in அமெரிக்க ஆங்கிலம்), 2018-02-09, பார்க்கப்பட்ட நாள் 2018-02-20
  3. TV, Colors, "வேலுநாச்சி தொடரின் பகுதிகள்- Voot செயலியில்", www.voot.com, பார்க்கப்பட்ட நாள் 2018-02-20

வெளி இணைப்புகள்

தொகு