சித்ரா (நடிகை)

இந்திய நடிகை

சித்ரா காமராஜ் ( Chitra Kamaraj ; 2 மே 1992 – 9 டிசம்பர் 2020), வி. ஜே. சித்ரா என்றும் அழைக்கப்படும் இவர், முன்னாள் முன்னணி இந்தியத் தொலைக்காட்சி நடிகையும், தொகுப்பாளரும் ஆவார்.[1] பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழ்த் தொலைக்காட்சித் தொடரில் தனது பாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றார். மேலும் கால்ஸ் (2021) திரைப்படத்தில் நடிப்பில் அறிமுகமானார். விளையாடு வாகை சூடு (2012), சட்டம் சொல்வது என்ன? போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றியதற்காவும் நன்கு அறியப்பட்டவர் (2013), சரவணன் மீனாட்சி (பருவம் 2) (2013-16), நொடிக்கு நொடி அதிரடி (2014), ஊர் சுத்தலாம் வாங்க (2014), மன்னன் மகள் (2014), என் சமையல் அறையில் (2014), ஒஸ்தி நகைச்சுவை குஸ்தி (2014), ரிங் ஓ ரிங் (2014), சின்ன பாப்பா பெரிய பாப்பா (2014-18), டார்லிங் டார்லிங் (2016-17), டான்ஸ் ஜோடி டான்ஸ் பகுதி1 (2016-17), சரவணன் மீனாட்சி (பகுதி 3) (2017), வேலுநாச்சி (2018) போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றியதற்காக நன்கு அறியப்பட்டவர்.

சித்ரா காமராஜ்'
பிறப்புமே 2, 1992(1992-05-02)
சென்னை, India
இறப்பு9 திசம்பர் 2020(2020-12-09) (அகவை 28)
நாசரேத்பேட்டை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பிற்கான
காரணம்
தூக்கிட்டுத் தற்கொலை
கல்விநீதிபதி பஷீர் அகமது சயீத் பெண்களுக்கான கல்லூரி (2012–2014)
பணி
  • நடிகை
  • தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்
  • Television anchor
செயற்பாட்டுக்
காலம்
2013–2020

தற்கொலை தொகு

9 டிசம்பர் 2020 அன்று, சித்ரா, நாசரேத்பேட்டையில் உள்ள ஒரு விடுதி அறையில் காலை 9:32 மணியளவில் இறந்து கிடந்தார். அறிக்கைகள் மற்றும் பிரேத பரிசோதனை முடிவுகள், சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றன. விரைவில் கணவர் ஹேமந்த் ரவியால் கொலை செய்யப்பட்டார் என்று வதந்தியும் எழுந்தன. தற்கொலைக்கு தூண்டியதாக சந்தேகிக்கப்பட்ட சித்ராவின் கணவர் ஹேமந்த் 15 டிசம்பர் 2020 அன்று கைது செய்யப்பட்டார். காவல் துறையின் விசாரணை நடந்து கொண்டுள்ளது.[2][3][4]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சித்ரா, ஹேமந்த் ரவி என்ற தொழிலதிபருடன் ஆகஸ்ட் 2020 இல் நிச்சயதார்த்தம் செய்து, அக்டோபர் 2020 இல் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு முன் பிப்ரவரி 2021 இல் விமரிசையாக நடத்த திட்டமிடப்பட்டது.[5]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ரா_(நடிகை)&oldid=3743559" இருந்து மீள்விக்கப்பட்டது