பாலியல் துன்புறுத்தல்
பாலியல் துன்புறுத்தல் (sexual harassment) என்பது வெளிப்படையான அல்லது மறைமுகமான பாலியல் செயல்களைச் செய்வதனை உள்ளடக்கிய ஒரு வகை துன்புறுத்தல் ஆகும். [1] பாலியல் துன்புறுத்தல் வாய்மொழி மீறல்கள் முதல் பாலியல் முறைகேடு அல்லது தாக்குதல் வரை பல செயல்களை உள்ளடக்கியது ஆகும்.[2] பணியிடம், வீடு, பள்ளி, தேவாலயங்கள் போன்ற பல்வேறு சமூக அமைப்புகளில் தொல்லைகள் ஏற்படலாம். துன்புறுத்துபவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் எந்த பாலினம் அல்லது பாலினத்தவராக இருக்கலாம். [3]
பெரும்பாலான நவீன சட்ட சூழல்களில், பாலியல் துன்புறுத்தல் என்பது சட்ட விரோதமானதாகக் கருதப்படுகிறது. பாலியல் தொல்லைகள் என்பதனைப் பொறுத்தவரை பொதுவாக சிறிய கிண்டல்கள், வெளிப்படையான கருத்துகள் அல்லது தனிமையில் இருக்கும் சமயத்தில் எல்லை மீறாத சம்பவங்கள் ஆகியன இதில் வராது.[4]
பணி செய்யுமிடத்தில் ஒரு முதலாளியால் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் என்பது சட்டவிரோத வேலைவாய்ப்பு பாகுபாடு ஆகும் . பல வணிகங்கள் அல்லது நிறுவனங்களுக்கு, பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்து ஊழியர்களைப் பாதுகாப்பது சட்ட முடிவெடுப்பது ஆகியன தற்போது முக்கிய இலக்குகளாக மாறியுள்ளன.
சொற்பிறப்பியல் மற்றும் வரலாறு
தொகுபாலியல் துன்புறுத்தல் பற்றிய நவீன சட்ட புரிதல் முதன்முதலில் 1970 களில் உருவாக்கப்பட்டது, இருப்பினும் இது தொடர்புடைய கருத்துக்கள் பல கலாச்சாரங்களில் இருந்ததாக அறியப்படுகிறது.
"பாலியல் துன்புறுத்தல்" என்ற சொல்
தொகுசட்ட ஆர்வலரான கேத்தரின் மெக்கின்னன் அமெரிக்காவில் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய சட்டங்களை உருவாக்கிய பெருமை பெற்றாலும், 1979 ஆம் ஆண்டில் செக்சுவல் ஹராஸ்மெண்ட் ஆஃப் ஒர்கிங் உமன் என்ற தலைப்பில் வெளியிட்ட இந்த நூலில் [5] இந்தச் சொல் உருவாகவில்லை. மாறாக இந்தச் சொற்றொடர் டொராண்டோவில் வெளியிடப்பட்ட தி குளோப் அண்ட் மெயில் செய்தித்தாளின் 1972 ஆவது இதழில் அச்சிடப்பட்டது. [6] அதற்கு முன்னதாக மேரி ரோவ் என்பவர் 1973இல் சாட்டர்ன் ரிங்ஸ் என்பதில் பாகுபாடு தொடர்பான அறிக்கையில் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தி உள்ளார்.[7]அந்த நேரத்தில், ரோவ் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி) பெண்கள் மற்றும் வேலைக்கான பிரிவின் வேந்தராக இருந்தார். [8] தொழில்நுட்பக் கழகத்தில் இவரது முயற்சிகள் காரணமாக, பாலியல் துன்புறுத்தலை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட குறிப்பிட்ட கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்கிய முதல் பல்கலைக்கழகம் எனும் பெருமை பெற்றது.
முக்கிய பாலியல் துன்புறுத்தல் வழக்குகள்
தொகு1970 மற்றும் 1980 களில் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளின் விளைவாக பாலியல் துன்புறுத்தல் முதலில் அமெரிக்க சட்டத்தில் குறியிடப்பட்டது. இதனால் துவக்கத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களே அதிக பாதிக்கப்பட்டனர். [9]
சூழ்நிலைகள்
தொகுபணியிடம், வீடு, பள்ளி, தேவாலயங்கள் போன்ற பல்வேறு சமூக அமைப்புகளில் தொல்லைகள் ஏற்படலாம்.[10][11][12][13][14][15][16] குற்றவாளி வாடிக்கையாளர், சக பணியாளர், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர், உறவினர், ஆசிரியர் அல்லது பேராசிரியர், மாணவர், நண்பர் அல்லது அந்நியன் என யாராகவும் இருக்கலாம். அதற்கு சாட்சிகள் இருக்கும் சம்யங்களிலும், இல்லாத சமயங்களிலும் பாலியல் தொல்லைகள் ஏற்படலாம். குற்றவாளி தனது நடத்தை அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதை முற்றிலும் அறியாமல் இருக்கலாம். குற்றவாளி தனது செயல்கள் சட்டவிரோதமானவை என்று முற்றிலும் அறியாமல் இருக்கலாம். [3] மன அழுத்தம், சமூக விலகல், தூக்கக் கோளாறுகள், உண்ணும் சிரமங்கள் மற்றும் ஆரோக்கியத்தின் பிற குறைபாடுகள் ஆகியவை துன்புறுத்தப்பட்ட நபர்கள் மீதான பாதகமான விளைவுகளில் அடங்கும் .பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றவாளி எந்த பாலினத்தவராகவும் இருக்கலாம். குற்றவாளி எதிர் பாலினமாக இருக்க வேண்டியதில்லை. இந்த சம்பவம் குற்றவாளி மற்றும்/அல்லது பாதிக்கப்பட்டவரின் தவறான புரிதலால் எழலாம். இந்த தவறான புரிதல்கள் நியாயமானதாகவோ அல்லது நியாயமற்றதாகவோ இருக்கலாம்.
சான்றுகள்
தொகு- ↑ Paludi, Michele A. Academic and workplace sexual harassment: a resource manual.
- ↑ Dziech, Billie Wright; Weiner, Linda. The Lecherous Professor: Sexual Harassment on Campus.[page needed] Chicago Illinois: University of Illinois Press, 1990. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8070-3100-1; Boland, 2002[page needed]
- ↑ 3.0 3.1 "Sexual Harassment". U.S. Equal Employment Opportunity Commission. Archived from the original on 2019-05-13. பார்க்கப்பட்ட நாள் 2010-07-16.
- ↑ வார்ப்புரு:Caselaw source
- ↑ "MacKinnon, Catharine A." University of Michigan Law School (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-04-11. பார்க்கப்பட்ட நாள் 2018-04-11.
- ↑ Hugh Gardner, "..and every prisoner an unprintable word," The Globe and Mail, 18 March 1972, p. 35. Source: ProQuest Historical Newspapers digital archive.
- ↑ Kamberi, Ferdi; Gollopeni, Besim (2015-12-01). "The Phenomenon of Sexual Harassment at the Workplace in Republic of Kosovo". International Review of Social Sciences 3: 13. https://www.researchgate.net/publication/316515762. பார்த்த நாள்: 2018-04-12.
- ↑ Rowe, Mary, "Saturn's Rings," a study of the minutiae of sexism which maintain discrimination and inhibit affirmative action results in corporations and non-profit institutions; published in Graduate and Professional Education of Women, American Association of University Women, 1974, pp. 1–9. "Saturn's Rings II" is a 1975 updating of the original, with racist and sexist incidents from 1974 and 1975. Revised and republished as "The Minutiae of Discrimination: The Need for Support," in Forisha, Barbara and Barbara Goldman, Outsiders on the Inside, Women in Organizations, Prentice-Hall, Inc., New Jersey, 1981, Ch. 11, pp. 155–171. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-645382-6.
- ↑ Lipsitz, Raina (2017-10-20). "Sexual Harassment Law Was Shaped by the Battles of Black Women" (in en-US). The Nation. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8378 இம் மூலத்தில் இருந்து 2018-04-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180408074746/https://www.thenation.com/article/sexual-harassment-law-was-shaped-by-the-battles-of-black-women/.
- ↑ Philips, Chuck. "Cover Story: You've Still Got a Long Way to Go, Baby". http://articles.latimes.com/1993-04-18/entertainment/ca-24123_1_chief-executive-officer.
- ↑ Becklund Philips, Laurie Chuck. "Sexual Harassment Claims Confront Music Industry: Bias: Three record companies and a law firm have had to cope with allegations of misconduct by executives". http://articles.latimes.com/1991-11-03/news/mn-1568_1_sexual-harassment.
- ↑ Philips, Chuck. "'Anita Hill of Music Industry' Talks : * Pop music: Penny Muck, a secretary whose lawsuit against Geffen Records sparked a debate about sexual harassment in the music business, speaks out in her first extended interview". https://www.latimes.com/archives/la-xpm-1992-03-05-ca-4917-story.html.
- ↑ Philips, Chuck. "Geffen Firm Said to Settle Case of Sex Harassment : Litigation: An out-of-court settlement of $500,000 is reportedly reached in one suit, but another may be filed". http://articles.latimes.com/1992-11-17/entertainment/ca-801_1_sexual-harassment.
- ↑ Philips, Chuck. "Controversial Record Exec Hired by Def". http://articles.latimes.com/1992-07-21/entertainment/ca-4385_1_sexual-harassment.
- ↑ Laursen, Patti. "Women in Music". http://articles.latimes.com/1993-05-02/entertainment/ca-30043_1_recording-industry-classical-labels-cbs-masterworks.
- ↑ Barnet, Richard. Controversies in the music business. Greenwood. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0313310942.