புதுச்சேரி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்

புதுச்சேரி இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதி (ஆட்சிப் பரப்பு) ஆகும் ஆனால் தனி மாநிலம் அல்ல. புதுதில்லியின் நேரடி குடியரசுத் தலைவரின் ஆளுமைக்குட்பட்டதாகும். புதுதில்லியை போன்று இங்கும் சிறப்பு திருத்த அரசியலமைப்பின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பெற்ற சட்டப்பேரவை, முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை போன்ற அமைப்புகள் இப்பகுதியின் ஆளுமையில் பங்குபெறுகின்றன. குடியரசுத்தலைவரின் பிரதிநிதியாக புதுச்சேரி ஆட்சிப்பகுதியின் மேற்பார்வையாளர்களாக செயல்படுவர் துணைநிலை ஆளுநர் ஆவார்.


துணைநிலை ஆளுநர்தொகு

புதுவை துணை நிலை ஆளுநர் (அ) புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தென் இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதியான புதுச்சேரியில் இந்தியக் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பெற்ற துணை நிலை ஆளுநர் புதுச்சேரியின் அரசியலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே ஆட்சிப் பகுதியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.

இவரது இல்லம் புதுச்சேரி நேரு பூங்காவில் உள்ள முன்னாள் பிரஞ்சு ஆளுநர் அரண்மணையான ராஜ் நிவாஸ் ஆகும். நடுவண் அரசு நேரிடையாக இவ்வரசிற்குத் தேவையான நிதிவளத்தை வழங்குகின்றது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர்கள்தொகு

புதுச்சேரியில் பொறுப்பு வகித்த துணைநிலை ஆளுநர்கள்
வ.எண் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 எஸ்.எல். சிலாம் 14.10.1963 13.10.1968
2 பி.டி. ஜாத்தி 14.10.1968 07.11.1972
3 செடிலால் 08.11.1972 29.08.1976
4 பி.டி. குல்கர்னி 30.08.1976 31.10.1980
5 ஆர்.கே. வயாஸ் 30.08.1976 31.10.1980
6 ஆர்.என். அல்திபூர் 27.07.1981 14.05.1982
7 கே.எம். சாண்டி 15.05.1982 05.08.1983
8 கோனா பிராபாகர ராவ் 02.09.1983 17.06.1984
9 திருபுவன் பிரசாத் திவாரி 01.10.1984 21.06.1988
10 ரஞ்சித் சிங் தயாள் 22.06.1988 19.02.1990
11 சந்திரவதி 19.02.1990 18.12.1990
12 அர் சுவருப் சிங் 19.12.1990 05.02.1993
13 ராஜேந்திர குமாரி பாஜ்பாய் 02.05.1995 22.04.1998
14 ரஜனி ராய் 23.04.1998 29.07.2002
15 கே. ஆர். மால்கனி 31.07.2002 27.10.2003
16 நாகேந்திர நாத் ஜா 05.01.2004 06.07.2004
17 எம். எம். லக்கேரா 07.07.2004 18.07.2006
18 முக்குத் மித்தை 19.07.2006 12.03.2008
19 பூபிந்தர் சிங் 15.03.2008 22.07.2008
20 கோவிந்த் சிங் குர்ஜார் 23.07.2008 06.04.2009
21 இக்பால் சிங் 27.07.2009 09.07.2013
22 வீரேந்திர கட்டாரியா 10.07.2013 11.07.2014
23 அஜய் குமார் சிங்க் 12.07.2014 26.05.2016
24 கிரண் பேடி 29.05.2016 -