இக்பால் சிங்

இக்பால் சிங் (Iqbal Singh)(பிறப்பு 4 ஜூன் 1945) என்பவர் இந்தியாவின் புதுச்சேரி ஒன்றியத்தின் துணைநிலை ஆளுநராகப் பதவி வகித்தவர் ஆவார்.

இக்பால் சிங்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
பதவியில்
27 சூலை 2009 – சூலை 2013
முன்னையவர்சுர்சித் சிங் பர்னாலா
பின்னவர்வீரேந்திர கத்தாரியா
உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
10 ஏப்ரல் 1992 – 9 ஏப்ரல் 1998
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சூன் 1945 (1945-06-04) (அகவை 79)
லாகூர், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்குரீந்தர் பீர் கவுர்

அரசியல்

தொகு

சிங், இந்தியத் தேசிய காங்கிரசில், அகில இந்தியக் காங்கிரசு நிர்வாக குழுவின் செயலாளர் உட்பட, 12 வருடங்கள் தொடர்ந்து காங்கிரஸ் காரியக் குழுவுக்கு அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர். 1992 முதல் 1998 வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[1]

ஆளுநர்

தொகு

இக்பால் சிங் புதுச்சேரி ஒன்றியத்தின் துணைநிலை ஆளுநராக 27 சூலை 2009 முதல் 9 சூலை 2013 வரை பதவி வகித்தார்.

கௌரவங்கள்

தொகு

இவரது பங்களிப்புகளைப் பாராட்டி, ஆந்திரப் பல்கலைக்கழகம் இவருக்கு 5 திசம்பர் 2009 அன்று கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Alphabetical List Of All Members Of Rajya Sabha Since 1952". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 14 July 2013. Iqbal Singh Shri Punjab INC 10/04/1992 09/04/1998

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்பால்_சிங்&oldid=3369735" இலிருந்து மீள்விக்கப்பட்டது