சுர்சித் சிங் பர்னாலா
சுர்சித் சிங் பர்னாலா (Surjit Singh Barnala, 21 அக்டோபர் 1925 - 14 சனவரி 2017 [1]) இந்திய அரசியல்வாதி ஆவார். தமிழக ஆளுநராக 1990 முதல் 1991 வரை 2 ஆண்டுகளும், 2004 முதல் 2011 வரை ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர்.
சுர்சித் சிங் பர்னாலா | |
---|---|
தமிழக ஆளுநர் | |
பதவியில் நவம்பர் 3, 2004 – ஆகத்து 31, 2011 | |
முன்னையவர் | பி. எஸ். ராம்மோகன் ராவ் |
பின்னவர் | கொனியேட்டி ரோசையா |
பதவியில் 29 மே 1990 – 14 பிப்ரவரி 1991 | |
முன்னையவர் | பி. சி. அலெக்சாண்டர் |
பின்னவர் | பீஷ்ம நரேன் சிங் |
புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் | |
பதவியில் 09 ஏப்ரல் 2009 – 27 ஜூலை 2009 | |
முன்னையவர் | கோவிந்த் சிங் குர்ஜார் |
பின்னவர் | இக்பால் சிங் |
ஆந்திரப் பிரதேச ஆளுநர் | |
பதவியில் 03 ஜனவரி 2003 – 03 நவம்பர் 2004 | |
முன்னையவர் | சி. ரங்கராஜன் |
பின்னவர் | சுசில்குமார் சிண்டே |
உத்தராகண்ட் ஆளுநர் | |
பதவியில் 09 நவம்பர் 2000 – 07 ஜனவரி 2003 | |
முன்னையவர் | "நிலை நிறுவப்பட்டது" |
பின்னவர் | சுதர்சன் அகர்வால் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அக்டோபர் 21, 1925 அதேலி, அரியானா, இந்தியா |
இறப்பு | 14 சனவரி 2017 | (அகவை 91)
அரசியல் கட்சி | அகாலி தளம் |
துணைவர் | சுர்சித் கவுர் |
சுர்சித் சிங், ஹரியானா மாநிலத்திலுள்ள அடேலி பேக்பூரில் பிறந்தார். பள்ளிப் படிப்பை நாபாவில் முடித்தவுடன் உயர் கல்வி கற்க லக்னோ சென்று லக்னோ பல்கலைக்கழகத்தில் 1946 ஆம் ஆண்டு சட்டம் பயின்று தேறினார். அவர் 1942 ஆம் ஆண்டு லக்னோவில் இருந்தபோது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார். 1967 ம் ஆண்டு பர்னாலாவில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். அதே ஆண்டு பர்னாலா தொகுதியிலிருந்து சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தத் தொகுதி உறுப்பினராக 1999 ஆம் ஆண்டு வரை இருந்தார். 1969 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சரானார். அமிர்தசரஸிலிருக்கும் குரு நானக் தேவ் பல்கலைக்கழகம் அமைந்ததில் இவருடைய சேவை குறிப்பிடத்தக்கது. 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகி மொரார்ஜி தேசாய் தலைமையில் விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். 1985 ஆம் ஆண்டு சிரோமணி அகாலி தள் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பஞ்சாப் மாநில முதல்வரானார்.பஞ்சாப் மாநிலத்தில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் முதலமைச்சர் பதவி வகித்தவர் பர்னாலா (29.9.1985 - 11.6.1987). பொற்கோவிலில் நடந்த ‘நீல நட்சத்திர நடவடிக்கை’ என்ற ராணுவத் தாக்குதலால் சீக்கியர்கள் மன நிம்மதி இழந்திருந்த நாட்கள் அவை. தங்களின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்ற பஞ்சாபியர்களின் கோபமும் வருத்தமும் மேலும் அதனுடன் சேர்ந்துகொண்டது. மிகவும் கொந்தளிப்பான காலகட்டம் என்றால் அது மிகையில்லை.
சிரோமணி அகாலி தளம் கட்சியில் குருசரண் சிங் டோரா, பிரகாஷ் சிங் பாதல் ஆகியோருடன் மூன்றாவது பெரும் தலைவராகக் கருதப்பட்டவர் சுர்ஜித் சிங்.
ஃபராக்கா ஒப்பந்தம்
தொகு1975-ல் நெருக்கடி நிலை காலத்தில் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப் பட்டார். 11 மாதங்கள் தனிமைச் சிறையில் இருந்தார். நெருக்கடி நிலை விலக்கப்பட்டு, 1977-ல் மக்களவைக்கு நடந்த பொதுத் தேர்தலில் சாங்ரூர் தொகுதியில் வெற்றி பெற்று, பிரதமர் மொரார்ஜி தேசாய் தலை மையிலான அரசில் வேளாண் அமைச்ச ராகப் பதவி வகித்தார். 1978-ல் வங்க தேசத்துடன் கங்கை நதி நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான வரலாற்றுப் புகழ் மிக்க ‘ஃபராக்கா’ ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் அவர்தான் கையெழுத்திட்டார்.
கண்ணியத்துக்குரிய பர்னாலா
தொகு1990 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அரசியல் உள்நோக்கத்தோடு கருணாநிதி தலைமையிலான திமுக அரசைக் கலைக்க, ‘உரிய வகையில் அறிக்கை தருமாறு’ பிரதமர் சந்திரசேகர் கோரியபோது, அதை ஏற்க முடியாதென்று உறுதியாக மறுத்தவர் பர்னாலா. கண்ணியத்துக்கு உரிய பர்னாலாவைப் பதவி விலகுமாறு கேட்க முடியாமல், உடனடியாக அவரை பிஹார் மாநில ஆளுநராக இடம்மாற்றினார் சந்திரசேகர். போதும் இந்த அரசியல் அசிங்கம் என்று பதவியைத் துறந்தார் பர்னாலா. மக்களவை உறுப்பினராக 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு வேதிப்பொருட்கள், உரம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார்.
இந்திய நாட்டுப் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் அவை போன்ற அனைத்துலக நிறுவனங்களில் இடம் பெற்றிருந்தார். இவர் இயற்கையை ரசித்தல், ஓவியம் வரைதல், புத்தகம் படித்தல், எழுதுதல் மற்றும் பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். 1988 ஆம் ஆண்டு இவருடைய ஓவியங்கள் பாட்டியாலா பல்கலைக்கழக கலைக்கூடத்தில் கண்காட்சியாக்கப்பட்டது.
தமிழ் நாடு அரசு ஆளுநராக 03. 11. 2004 அன்று முதல் ஆகத்து 31 2011 வரை ஏழாண்டுகள் பதவி வகித்தார். ஒடிசாவின் ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வகித்தார். ஒன்றியப் பகுதிகளான புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் தீவுகளின் துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்தார்.தமிழ்நாடு, ஆந்திரம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் ஆளுநராகவும் அந்தமான் - நிகோபர் தீவுகளில் துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்தவர். நாட்டில் கித்வாய்க்குப் பிறகு, அதிக ஆண்டுகள் ஆளுநராக இருந்தவர் இவரே.
மறைவு
தொகுசண்டிகரிலுள்ள அரசு மருத்துவமனையில் இவர் உயிர் பிரிந்தது.