புதுச்சேரி அமைச்சரவை


இக்கட்டுரை
புதுவை அரசு மற்றும் புதுவை அரசியல்
என்ற தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்


புதுச்சேரி அமைச்சரவை (அ) புதுவை அமைச்சரவை புதுவை அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலைமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழுவை அமைச்சரவை எனப்படும்.

இவ்வமைச்சர்கள் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றியக் கட்சியை துணை நிலை ஆளுநரால் அழைக்கபெற்று அதன்படி அவர்களால் அமைக்கப்பட்டக் குழுவின் தலைவருக்கு முதலைமச்சர் பதவி பிராமணமும் இரகசிய காப்பு பிராமாணமும் செய்யபெற்று, அத்தலைவரால் (முதலமைச்சரால்) வழங்கப்பட்ட பட்டியிலின்படி இதர இலாக்கா அமைச்சர்களுக்கும் அதே போன்றே துணை நிலை ஆளுநரால் பதவி பிரமானம் செய்யப்பெற்றதற்குப் பின ஆட்சி நிர்வாகத்தில் பங்கு கொள்கின்றனர்.

தற்பொழுதய அமைச்சரவை

தொகு
எண் பெயர் பதவி இலாகா சார்ந்தவை
1 திரு. வீ. வைத்தியலிங்கம் முதல்வர் பொது நிதி மற்றும் திட்டம், பொது நிர்வாகம்,மின்சாரம், விவசாயம், இதர அமைச்சர்களின் இலக்காக்களில் சம்பந்தப்படாத பொறுப்புகள்.,
2 திரு இ. வள்சராஜ் உள்துறை நல்வாழ்வு மற்றும் குடும்ப நலன், சட்டம், சிறை, துறைமுகம் தொழில், வணிகம், அறிவியல்,தொழில்நுட்பம், சூழ்நிலையியல்,லஞ்ச ஒழிப்பு.
3 திரு. எம்.ஒ.எச்.எப்.ஷாஜகான் பொதுப்பணித் துறை பொதுப்பணி. தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, கல்லூரிக் கல்வி, கலை மற்றும் பண்பாடு.


4 திரு. மல்லாடி கிருஷண ராவ் வருவாய்த் துறை வருவாய், வரி, மீன்வளம், சுற்றுலா, உள்நாட்டு விமானப் போக்குவரத்து, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்.
5 திரு. எம்.கந்தசாமி சமூக நலன் மற்றும் கூட்டுறவுத் துறை பொது நலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், ஆதி திராவிடர் நலன், பிற்பட்டோர் நலன், கூட்டுறவு, குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் குறைத் தீர்ப்பு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு.


6 திரு.ஏ.நமச்சிவாயம் மக்கள் நல்வாழ்வுத் துறை பொது மக்கள் நல்வாழ்வு (சுகாதாரத்துறை), உள்ளாட்சி, சமூக மேம்பாடு,தீயணைப்புத்துறை, வீட்டு வசதி, அச்சு, நகர மேம்பாடு, கால்நடைப் பராமரிப்பு, பொருளாதாரம் மற்றும் புள்ளியல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுச்சேரி_அமைச்சரவை&oldid=3539737" இலிருந்து மீள்விக்கப்பட்டது