புதுச்சேரி அரசு


இக்கட்டுரை
புதுவை அரசு மற்றும் புதுவை அரசியல்
என்ற தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்

புதுச்சேரி அரசு-(புதுவை அரசு) இந்திய அரசின் நேரடி ஆளுமைக்குட்பட்ட ஒன்றிய ஆட்சிப் பகுதியான புதுச்சேரி மற்றும் அதன் பிராந்தியப் பகுதிகளான காரைக்கால், மாஹே, ஏனாம் போன்ற பிராந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய அரசாக புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றது.

இவ்வரசு நடுவண் அரசால் நியமிக்கப்பெற்ற துணை நிலை ஆளுநரின் மேற்பார்வையில் ஒன்றிய ஆட்சிப் பகுதி வாழ் மக்களால் சட்டப்பேரைத் தேர்தலில் வாக்களிக்கபெற்று தேர்ந்தெடுக்கபெற்ற முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆளுமையின் கீழ் செயல்படுகின்றது. துணை நிலை ஆளுநர் மேற்பார்வையின் கீழ் இவ்வரசு இயங்கினாலும் ஆட்சி அதிகாரங்களில் பங்கெடுப்பவர் முதல்வரும் அவரது அமைச்சரவை மட்டுமே.

சட்டம் இயற்றும் அவை தொகு

நீதித் துறை தொகு

செயலாக்கப் பிரிவு தொகு

துறைகள்
 • அரசு பணிமனை
 • அறிவியல்,தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை
 • ஆதி திராவிடர் நலத்துறை
 • ஆயத்துறை
 • இந்து சமய நிறுவனங்கள்
 • உள்ளாட்சித்துறை
 • உயர் தொழில்நுட்ப கல்வி துறை
 • ஊரக வளர்ச்சி துறை
 • கூட்டுறவு துறை
 • எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை
 • கணக்கு மற்றும் கருவூலகத் துறை
 • கலை மற்றும் பண்பாட்டு துறை
 • கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை
 • வனம் மற்றும் வனவிலங்குத்துறை
 • காவல் துறை
 • குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை

தேர்தல் தொகு

புதுச்சேரி ஒன்றிய ஆட்சி பரப்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளும் மற்றும் 3 நியமன உறுப்பினர் தேர்தல் , 1 மக்களவைத் தொகுதி மற்றும் 1 மாநிலங்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகின்றது.

30 சட்டமன்றம் மற்றும் 1 மக்களவைத் தொகுதி இவையிரண்டும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வகையிலும், 1 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் மறைமுகத் தேர்தலாகவும் நடைபெறுகின்றது. இதனுடன் நியமன உறுப்பினர்கள் 3 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இத்தேர்தலில் பங்கெடுக்கும் பதிவுபெற்ற மொத்த வாக்காளார்களாக 6,36,045 பேர் 20.01.2004 நிலவரப்படி உள்ளனர். (ஆண் வாக்காளரகள் 3,10,289- பெண் வாக்காளர்கள் 3,25,756). மக்களவைக்கு முதல் முதலாக தேர்தல் நடைபெற்றது 1963 ஆம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுச்சேரி_அரசு&oldid=3146729" இலிருந்து மீள்விக்கப்பட்டது