புதுச்சேரித் தேர்தல்கள்


இக்கட்டுரை
புதுவை அரசு மற்றும் புதுவை அரசியல்
என்ற தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்

புதுச்சேரித் தேர்தல்கள் புதுச்சேரி ஒன்றிய ஆட்சி பரப்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளும் மற்றும் 3 நியமன உறுப்பினர் தேர்தல் , 1 மக்களவைத் தொகுதி மற்றும் 1 மாநிலங்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகின்றது.

30 சட்டமன்றம் மற்றும் 1 மக்களவைத் தொகுதி இவையிரண்டும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வகையிலும், 1 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் மறைமுகத் தேர்தலாகவும் நடைபெறுகின்றது. இதனுடன் நியமன உறுப்பினர்கள் 3 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இத்தேர்தலில் பங்கெடுக்கும் பதிவுபெற்ற மொத்த வாக்காளார்களாக 6,36,045 பேர் 20.01.2004[1] நிலவரப்படி உள்ளனர். (ஆண் வாக்காளரகள் 3,10,289- பெண் வாக்காளர்கள் 3,25,756). மக்களவைக்கு முதல் முதலாக தேர்தல் நடைபெற்றது 1963 ஆம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


மேற்கோள்கள்

தொகு