கீழ்க்கயல் மத்தாய் சாண்டி

கீழ்க்கயல் மத்தாய் சாண்டி (Kizhakkayil Mathai Chandy) (ஆகஸ்ட் 6 1921 - 7 செப்டம்பர் 1998) என்பவர் கவர்னராகப் பணியாற்றிய இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய மாநிலங்களில் குசராத்து, மத்திய பிரதேசம் மற்றும் ஒன்றிய பிரதேசமான புதுச்சேரி கவர்னராகப் பணியாற்றியுள்ளார். இவர் கேரள பிரதேச காங்கிரசு குழுவின் (கேபிசிசி) முன்னாள் தலைவரும், ரப்பர் வாரியத்தின் தலைவருமாகாப் பணியாற்றியுள்ளார்.

கீழ்க்கயல் மத்தாய் சாண்டி
பேரா. கீ. ம. சாண்டி
8வது ஆளுநர் மத்திய பிரதேசம்
பதவியில்
30 திசம்பர் 1987 – 30 மார்ச் 1989
முதலமைச்சர்மோதிலால் வோரா
அர்ஜுன் சிங்
முன்னையவர்நாராயண் தத்தா ஓசா (பொறுப்பு)
பின்னவர்சரளா கிரெவால்
பதவியில்
15 மே 1984 – 30 நவம்பர் 1987
முதலமைச்சர்அர்ஜூன் சிங்
Motilal Vora
முன்னையவர்பா. த. சர்மா
பின்னவர்நாராயணன் தத் ஓஜா (பொறுப்பு)
6வது குசராத்து ஆளுநர்
பதவியில்
6 ஆகத்து 1983 – 26 ஏப்ரல் 1984
முதலமைச்சர்மாதவசிங் சோலான்கி
முன்னையவர்சாரதா முகர்ஜி
பின்னவர்பிரஜ் குமார் நேரு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கீழ்க்காயல் மத்தாய் சாண்டி

(1921-08-06)6 ஆகத்து 1921
பாலா, திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியா (தற்பொழுது கேரளாவில்)
இறப்பு7 செப்டம்பர் 1998(1998-09-07) (அகவை 77)
எர்ணாகுளம், கேரளா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்(s)
மரியாகுட்டி சாண்டி
(தி. 1939; His death 1998)
பிள்ளைகள்10
வாழிடம்(s)பாலா, கேரளா
முன்னாள் கல்லூரிபுனித பெர்க்மான்சு கல்லூரி

பல்கலைக் கல்லூரி, திருவனந்தபுரம்
வேலை
இணையத்தளம்www.kmchandy.org
As of 11 ஜூலை 2020
மூலம்: [1]

அரசியல் மற்றும் அரசுப் பணி தொகு

சாண்டி, 26 வயதில் சுதந்திரத்திற்குப் பிறகு மாநில சட்டப்பேரவையில் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை 1952 மற்றும் 1954 ஆம் ஆண்டுகளில் மீண்டும் தேர்ந்தெடுத்தனர். சாண்டி உறுப்பினராக உள்ள நிறுவனம் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் வளர்ச்சிக்கு முக்கியமாகப் பங்காற்றினார். 1953ஆம் ஆண்டில் இளைஞர் காங்கிரசு பிரிவு முதன்முதலில் இவரால் தொடங்கப்பட்டது. இவர் மீனாட்சி கூட்டுறவு நில அடமான வங்கியை நிறுவினார். பாலாய் கூட்டுறவு சந்தைப்படுத்தல் சங்கத்தின் நிறுவனரும் இவரே. கேரள மாநில ரப்பர் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு இவரால் 1971இல் நிறுவப்பட்டது. இவர் 1966 இல் இந்திய ரப்பர் விவசாயிகள் சங்கத்தை நிறுவினார். தற்போதைய கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ரப்பர் தொழில்நுட்பத்தில் இளநிலை தொழில்நுட்பக் கல்வியினை நிறுவ மூளையாகச் செயல்பட்டார். இவருடைய முயற்சியால்தான் இந்தியா, இயற்கை ரப்பர் உற்பத்தி நாடுகளின் சங்கத்தில் சேர்ந்தது. 1972 முதல் 1978 வரை பன்னாட்டு ரப்பர் ஆய்வுக் குழு, இயற்கை ரப்பர் உற்பத்தி நாடுகளின் சங்கம் (ஏ.என்.ஆர்.பி.சி), லண்டனில் நடைபெற்ற சர்வதேச ரப்பர் ஆராய்ச்சி மேம்பாட்டு வாரியம், கோலாலம்பூர், பாங்காக், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைபெற்ற மாநாடுகளுக்கு இவர் இந்தியாவிலிருந்து ஏராளமான பிரதிநிதிகள் பங்குபெற வழிநடத்தினார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சாண்டி, 6 ஆகத்து 1921இல் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாளையில் கீழக்காயில் மத்தாய் மற்றும் மத்தாய் மரியம் இணையின் மகனாகப் பிறந்தார். இவருக்கு 3 இளைய சகோதர்களும் ஒரு சகோதரியும் உடன் பிறந்தவர்கள். இவர்களில் ஒருவர் பாலா கே.எம். மேத்யூ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[2] இவர் பாளையில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி கல்வியினை சங்கணாச்சேரியிலும் திருவனந்தபுரத்திலும் முடித்தார். இவர் 1942இல் ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர் 1939ஆம் ஆண்டில் தனது 18 வயதில் மரியகுட்டி சாண்டியை மணந்தார். இவர்களுக்கு எட்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.[3]

இறப்பு தொகு

சாண்டி 7 செப்டம்பர் 1998 அன்று, 77 வயதில், எர்ணாகுளத்தில் காலமானார்.

சுயசரிதை தொகு

சாண்டி திடீரென இறந்ததால் "ஜீவிதா வஜியோரகாஷக்கல் " என்ற சுயசரிதையை முடிக்க முடியவில்லை. ஆனால் பின்னர் 1999இல் தொழிற்கட்சி (இந்தியா) வெளியீடாக வெளியிடப்பட்டது.

2009 ஆம் ஆண்டில் நடப்பு புத்தகங்களால் பாலா கே.எம். மேத்யூ "வரிகா வரிகா சஹாஜரே " என்ற தலைப்பில் வாழ்க்கை வரலாறு நூலை வெளியிட்டார்.[4][5][6][7]

மேற்கோள்கள் தொகு

  1. "Prof. K.M. Chandy". Rajbhavan Gujarat (Govt. of Gujarat). பார்க்கப்பட்ட நாள் 16 May 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Genealogy of Prof. K.M. Chandy". Roots-The Kerala Christian Family Tree.
  3. "Prof. K.M. Chandy(personal details)". Roots. பார்க்கப்பட்ட நாள் 12 June 2020.
  4. "Prof. K.M. Chandy". Rajbhavan Madhya Pradesh (Govt. of Madhya Pradesh). பார்க்கப்பட்ட நாள் 16 May 2012.
  5. "Three instances when Governors didn't buckle under pressure". National Herald India. பார்க்கப்பட்ட நாள் 9 December 2019.
  6. "Interview with Prof. KM Chandy (Freedom fighter, Congress leader,MLA,State Governor)".
  7. "Bio-data of Prof.K.M Chandy". Prof.K.M Chandy Foundation. பார்க்கப்பட்ட நாள் 10 July 2020.