வாழ்க்கை வரலாறு

ஒரு மனிதரின் வாழ்க்கையைப் பற்றி மற்றொருவர் எழுதியது

வாழ்க்கை வரலாறு அல்லது சுயசரிதை, என்பது ஒருவருடைய வாழ்க்கையின் முழுமையான நிகழ்வுகளின் தொகுப்பாகும். இது ஒருவருடைய கல்வி, வேலை, உறவுகள் மற்றும் இறப்பை மட்டும் உள்ளடக்கியதல்ல. மாறாக ஒருவருடைய வாழ்க்கைச் சாித்திரம் என்பது அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளை ஒருவருடைய அனுபவத்தின் நெருக்கமான விவரங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை முன்னிலைப்படுத்தி அவர்களின் ஆளுமைதிறனைப் பற்றி விளக்கமாக வர்ணிப்பதாகும்.அது மட்டுமல்லாமல் அத்தகைய ஆளுமையின் பகுப்பாய்வையும் சில நேரங்களில் உள்ளடக்கியிருக்கலாம்.

ஜேக்கப் டான்சன் என்பவரால் வெளியிடப்பட்ட புளூட்டாக் இன் உன்னத கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களின் வாழ்க்கை' புத்தகத்தின் 1727 ஆம் ஆண்டு பதிப்பின் மூன்றாம் தொகுதி

வாழ்க்கை வரலாற்று படைப்புகள் பொதுவாக புனைகதை அல்ல, ஆனால் ஒரு நபரின் வாழ்க்கையை சித்தரிக்க புனைகதை வழியாகவும் கூறலாம். வாழ்க்கை வரலாற்றின் ஒரு ஆழமான வடிவம் மரபு எழுத்துக்களிலே காணப்படும் என்று நம்பினாலும், கவிதை இலக்கியம் முதல் திரைப்படம் வரை பல்வேறு ஊடகங்களின் படைப்புகள் வழியாகவும் சுயசரிதை வெளிவரலாம். மேலும் அங்கீகரிக்கப்பட்ட சுயசரிதை என்பது யாரைப் பற்றி எழுதுகிறோமோ அவருடைய அனுமதி பெற்றோ, அவருடைய ஒத்துழைப்புடனோ அல்லது அவருடைய வழித்தோன்றல்களின் பங்களிப்புடனோ எழுதப்பட வேண்டிய ஒன்றாகும். சிலநேரங்களில் சுய சாிதை என்பது ஒருவர் தன்னைப் பற்றி தானோ அல்லது உதவியாளரை வைத்தோ கூட எழுதலாம்.

வரலாறு

தொகு
 
எழுத்தாளரான ஐன்ஹார்ட்

முதலில் ஒருவருடைய வரலாற்றை எழுதும் முறை மற்ற வரலாற்றின் ஒரு துணைப் பகுதியாகவே கருதப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரைப் பற்றி எழுதக் கூடியதாகவே இருந்தது. பொது வரலாற்று எழுத்திலிருந்து வேறுபட்ட சுயசரிதையின் சுயாதீன வகையானது, 18 ஆம் நூற்றாண்டில் உருவாகத் தொடங்கி, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதன் தற்போதைய வடிவத்தை அடைந்துள்ளது.[1]

சுயசரிதை என்பது வரலாற்றின் ஆரம்பகாலத்திலிருந்து வரும் தொன்மையான இலக்கிய வகையாகும். எகிப்தியலாளர் மிரியம் லிச்டெய்மின் கூற்றுப்படி, தனிப்பட்ட கல்லறை கல்வெட்டுகளின் பின்னணியில் வாழ்கை வரலாறு, எழுத்து இலக்கியத்தை நோக்கி அதன் முதல் அடியை எடுத்து வைத்தது. இவை மறைந்த அரசர்கள் மற்றும் பிரபுக்களின் வாழ்க்கையை விவரிக்கும் நினைவு வாழ்க்கை வரலாற்று நூல்களாகும். [2]ஆரம்பகால வாழ்க்கை வரலாற்று நூல்கள் கிமு 26 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

கிமு 21 ஆம் நூற்றாண்டில், மெசொப்பொத்தேமியாவில் கில்காமேஷ் பற்றி மற்றொரு பிரபலமான வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது . இதன் ஐந்து பதிப்புகளில் ஒன்று வரலாற்று ரீதியானதாக இருக்கலாம்.

அதே பகுதியிலிருந்து சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, மிகவும் பிரபலமான சுயசரிதையின்படி, ஆபிரகாம் மற்றும் அவரது 3 வழித்தோன்றல்களும் பண்டைய எபிரெய சுயசரிதைகளின் குடிமக்களாக கற்பனையாகவோ அல்லது வரலாற்று ரீதியாகவோ மாறினர்.

ஆரம்பகால ரோமானிய வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்களில் ஒருவரான கார்னீலியஸ் நீபோஸ் கி.மு. 44-ல் எக்லென்ஸியம் கிம்பரேடாரம் விட்டேயி (லைவ்ஸ் ஆப் அவுட்ஸ்டேன்டிங் ஜென்ரல்ஸ்) என்ற நூலை வெளியிட்டார். மிக நீளமான வாழ்க்கை வரலாறான "பாரலல் லைவ்ஸ்" புளுடார்ச் என்பவரால் கிரேக்க மொழியில் எழுதி கி.பி.80-ல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் புகழ்பெற்ற கிரேக்கர்களைப் புகழ்பெற்ற ரோமானியர்களுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. பண்டைய வாழ்க்கை வரலாறுகளின் மற்றொரு நன்கு அறியப்பட்ட தொகுப்பு பேரரசர் ஹாட்ரியன் காலத்தில் கி.பி 121 இல் எழுதப்பட்ட சூடோனியஸ் எழுதிய டி விடா செஸரம் ("சீசர்களின் வாழ்க்கைகள்") ஆகும். இதற்கிடையில், கிழக்கு ஏகாதிபத்திய விளிம்பில், எழுதப்பட்ட சுவிசேஷ நூல்கள் வழியாக இயேசுவின் வாழ்க்கை வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது.

முந்தைய இடைக்காலத்தில் (கி.பி.400 - 1450) ஐரோப்பாவில் நாகாிகத்தைப் பற்றிய விழிப்புணர்வு குறைந்தது. அந்தச் சமயத்தில் கத்தோலிக்க திருச்சபையே ஒட்டுமொத்த உலகத்திலும் இருக்கும் ஒரே ஓர் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தது. அதனாலே ரோமானிய கத்தோலிக்க தேவாலயத் துறவிகள், மதகுருமார்கள் இக்காலத்தை புனிதர்கள், திருச்சபைத் தந்தையர் மற்றும் போப்புகள் போன்றோரின் வாழ்க்கை வரலாறு எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொண்டனர். இவர்களுடைய படைப்புகள் மக்களிடையே அகத்தூண்டலை உண்டுபண்ணுவதாகவும் மதமாற்றத்திற்கான ஊடகமாகவும் திகழ்ந்தன. ஆனால் இக்காலகட்டத்தில் கூட, ரோமானியர்களின் பேரரசனாக சார்லிமேனின் வாழ்க்கையைப் பற்றி எயின்கார்ட் எழுதிய "விட்டா கரோலி மாக்னி(சார்லிமேனின் வாழ்க்கை)" என்பது மதச்சார்பற்ற வாழ்க்கை வரலாற்றின் மிக முக்கியமான உதாரணமாக உள்ளது.

இடைக்கால மேற்கு இந்தியாவில், சைனர்கள் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற சமண நபர்களின் வாழ்க்கையைப் பற்றிய குறு வாழ்க்கை வரலாற்று விவரிப்புகளை எழுதும் சமஸ்கிருத சமண இலக்கிய வகை இருந்துள்ளது. பிரபந்தங்கள் என்றழைக்கப்பட்ட இவை முதன்மையாக 13 ஆம் நூற்றாண்டிலிருந்து சமண அறிஞர்களால் எழுதப்பட்டன, ,ref>Thaker, Jayant Premshankar (1970). Laghuprabandhasaṅgrahah (in ஆங்கிலம்). Oriental Institute. p. 18.</ref>பிரபந்தம் என்று வெளிப்படையாக பெயரிடப்பட்ட முதல் தொகுப்பு ஜீனபத்ரரின் பிரபந்தவலி (பொ.ச. 1234) ஆகும்.

இடைக்கால இசுலாமிய நாகரீக (கி.பி.750 - 1258) காலத்தில் முகமது மற்றும் முக்கியமான தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டன. மற்ற படைப்புகளைக் காட்டிலும் இவ்வகை வாழ்க்கை வரலாறுகள் அதிக சமூகச் செய்திகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. பின்னர் இடைக்கால இஸ்லாமிய உலகில் வாழ்ந்த பல வரலாற்று நபர்களின் (ஆட்சியாளர்கள் முதல் அறிஞர்கள் வரை) வாழ்க்கையை ஆவணப்படுத்தத் தொடங்கினார். [3]

இடைக்காலத்தின் பிற்பகுதியில், மன்னர்கள், மாவீரர்கள் மற்றும் கொடுங்கோலர்களின் வாழ்க்கை வரலாறுகள் வெளிவரத் தொடங்கியதால், வாழ்க்கை வரலாறுகள் ஐரோப்பாவில் தேவாலயம் சார்ந்ததாக இல்லை. இத்தகைய சுயசரிதைகளில் மிகவும் பிரபலமானது சர் தாமஸ் மலோரி எழுதிய லெ மோர்டே டி ஆர்தர் ஆகும்.

கடற்கொள்ளையர்களைப் பற்றிய பிரபலமான கருத்தாக்கங்களை வடிவமைப்பதில் செல்வாக்கு செலுத்திய சார்லஸ் ஜான்சன் எழுதிய எ ஜெனரல் ஹிஸ்டரி ஆஃப் தி பைரேட்ஸ் (1724), பல பிரபலமான கடற்கொள்ளையர்களின் வாழ்க்கை வரலாறுகளுக்கு முக்கிய ஆதாரமாகும். [4]

ஐக்கிய இராச்சியத்தில் புகழ்பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை வரலாறுகளின் குறிப்பிடத்தக்க ஆரம்ப தொகுப்பு வில்லியம் ஓல்டிஸ் தொகுத்த பயோகிராபியா பிரிட்டானிகா (1747-1766) என்பதாகும்..

அமெரிக்க சுயசரிதை பெரும்பாலும் ஆங்கிலேய வாழ்க்கை வரலாற்றுகளின் மாதிரியைப் பின்பற்றியது, வாழ்க்கை வரலாறு, மனிதர்களின் வரலாற்றின் ஒரு பகுதியாகும் மேலும் சமூகத்தையும் அதன் நிறுவனங்களையும் புரிந்து கொள்ள சிறந்த மனிதர்களின் வாழ்க்கை அவசியம் என்ற தாமஸ் கார்லைலின் கருத்தை உள்ளடக்கி ஆரம்பகால அமெரிக்க சுயசரிதையில் வரலாற்று உந்துதல் ஒரு வலுவான அம்சமாக இருக்கும் என்றாலும், அமெரிக்க எழுத்தாளர்கள் ஒரு தனித்துவமான அணுகுமுறையை செதுக்கினர். தேசியப் பண்பை வரையறுக்கும் செயல்பாட்டில் ஒரு வாசகனின் தனிப்பட்ட தன்மையை வடிவமைக்க முயன்ற சுயசரிதை வடிவம்தான் வெளிப்பட்டது. [5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. Kendall.
  2. மிரியம் லிச்தைம், பண்டைய எகிப்தியன் லுடரேச்சர், பெர்க்லி: யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா பிரஸ், 2006, தொகுதி I, ப 3, https://archive.org/details/MiriamLichtheimAncientEgyptianLiteratureVolI/page/n1/mode/2up
  3. Nawas 2006, ப. 110.
  4. Johnson 2002, ப. ?.
  5. Casper 1999, ப. ?.
  6. Stone 1982, ப. ?.

பார்வை நூல்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழ்க்கை_வரலாறு&oldid=3871702" இலிருந்து மீள்விக்கப்பட்டது