குஜராத் ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

குஜராத் ஆளுநர்களின் பட்டியல் என்பது குஜராத் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் தொகுப்பாகும். இவரின் இருப்பிடம் காந்திநகரில் உள்ள ராஜ்பவன் (குஜராத்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது குசராத்து மாநிலத்தின் ஆளுநராக ஆச்சார்யா தேவ் விராட் என்பவர் பொறுப்பு வகிக்கின்றார்.

குஜராத் ஆளுநர்
ராஜ் பவன், குஜராத்
தற்போது
ஆச்சார்யா தேவ் விராட்

21 சூலை 2019 முதல்
வாழுமிடம்ராஜ்பவன்; காந்திநகர்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்மேகதி நவாஸ் ஜங்
உருவாக்கம்1 மே 1960; 64 ஆண்டுகள் முன்னர் (1960-05-01)
இணையதளம்https://rajbhavan.gujarat.gov.in
இந்திய வரைபடத்தில் உள்ள குஜராத் மாநிலம்

அதிகாரவரம்பு மற்றும் செயற்பாடுகள்

தொகு

ஆளுநரின் அதிகாரங்கள் பல வகைகளில் மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்றன.

  • செயலாட்சி அதிகராங்கள் நிருவாகம், நியமனம் மற்றும் நீக்கல் அதிகாரங்கள்,
  • சட்டமன்ற அதிகாரங்கள் மாநிலங்களின் சட்டமன்றம் மூலம் சட்டங்களை உருவாக்குதல். (சட்டமன்ற மேலவை மற்றும் சட்டமன்ற கீழவை)
  • வரையறைக்குட்பட்ட அதிகாரங்கள் ஆளுநரின் அதிகார வரம்பிற்குள் (அ) வரையறைக்குட்படுத்தப்பட்ட அதிகாரங்களின்படி செயல்படும் அதிகாரங்கள்.

குஜராத் மாநில முன்னாள் ஆளுநர்களின் பட்டியல்

தொகு
குஜராத் முன்னாள் மாநில ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 மேகதி நவாஸ் ஜங் 1 மே 1960 1 ஆகத்து 1965
2 நித்யானந்த் கனுங்கோ 1 ஆகத்து 1965 7 டிசம்பர் 1967
3 பி.என். பகவதி 7 டிசம்பர் 1967 26 டிசம்பர் 1967
4 ஸ்ரீமன் நாராயண் 26 டிசம்பர் 1967 17 மார்ச் 1973
5 பி.என். பகவதி 17 மார்ச் 1973 4 ஏப்ரல் 1973
6 கம்பன்தொடாத் குன்னான் விஸ்வநாதம் 4 ஏப்ரல் 1973 14 ஆகத்து 1978
7 சாராதா முகர்ஜி 14 ஆகத்து 1978 6 ஆகத்து 1983
8 கிஷிகெத்தில் மேத்யூ சாண்டி 6 ஆகத்து 1983 26 ஏப்ரல் 1984
9 பிராஜ் குமார் நேரு 26 ஏப்ரல் 1984 26 பெப்ரவரி 1986
10 ராம் கிருஷ்ணா திரிவேதி 26 பெப்ரவரி 1986 2 மே 1990
11 மகிபால் சாஸ்திரி 2 மே 1990 21 டிசம்பர் 1990
12 சரூப் சிங் 21 டிசம்பர் 1990 1 சூலை 1995
13 நரேஷ் சந்திரா 1 சூலை 1995 1 மார்ச் 1996
14 கிருஷ்ண பால் சிங் 1 மார்ச் 1996 25 ஏப்ரல் 1998
15 அன்சுமன் சிங் 25 ஏப்ரல் 1998 16 சனவரி 1999
16 கை.ஜி.பாலகிருஷ்ணன்[1] 16 சனவரி 1999 18 மார்ச் 1999
17 சுந்தர் சிங் பண்டாரி 18 மார்ச் 1999 7 மே 2003
18 கைலாஷ்பதி மிஸ்ரா 7 மே 2003 2 சூலை 2004
19 பல்ராம் சாக்கர் 2 சூலை 2004 24 சூலை 2004
20 நவால் கிஷோர் சர்மா 24 சூலை 2004 24 சூலை 2009
21 எஸ். சி. ஜமீர் [2] 24 சூலை 2009 26 நவம்பர் 2009
22 கமலா பெனிவால் 27 நவம்பர் 2009 6 ஜூலை 2014
23 மார்க்ரெட் ஆல்வா 7 சூலை 2014 15 சூலை 2014
24 ஓம் பிரகாஷ் கோலி 16 சூலை 2014[3] 21 சூலை 2019
25 ஆச்சார்யா தேவ் விராட் 21 சூலை 2019 தற்பொழுது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்

தொகு
  1. "கே.ஜி. பாலகிருஷ்ணன் குஜராத் ஆளுநராக பொறுப்பேற்றார் இந்தியன் எக்ஸ்பிரஸ". Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2009-05-25.
  2. Jamir served as acting governor during Dwivedi's official term of service as well as after his death.
  3. "O P Kohli takes oath as Gujarat governor". Timesofindia Journal. பார்க்கப்பட்ட நாள் 19 July 2014.

வெளிப்புற இணைப்புகள்

தொகு