இராம் கிசோர் வியாசு
பண்டித இராம் கிசோர் வியாசு (Ram Kishore Vyas) என்பவர் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த இந்தியத் தேசிய காங்கிரசு தலைவர் ஆவார்.[1] இவர் 1908 மே 23 அன்று செய்ப்பூரில் பண்டிட் லாதுராமில் பிறந்தார். இவர் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார். ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகராக 1972 முதல் 1977 வரையிலும்,[2] ராஜஸ்தான் உள்துறை அமைச்சர், ராஜஸ்தான் பிரதேச இந்தியத் தேசிய காங்கிரசு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
இராம் கிசோர் வியாசு | |
---|---|
புதுச்சேரி ஆளுநர் | |
பதவியில் 1980 - 1981 | |
ராஜஸ்தான் சட்டப்பேரவைத்ட் தலைவர் | |
பதவியில் 1972 - 1977 | |
முன்னையவர் | நிரஞ்சன் நாத் ஆச்சார்யா |
பின்னவர் | இலட்சுமன் சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வியாசு அவாமகால் மற்றும் சோமு ராஜஸ்தான் சட்டமன்றத் தொகுதிகளில் தலா இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் ஏப்ரல் 16, 1981 அன்று செய்ப்பூரில் மாரடைப்பால் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு
- ↑ "Democratic Governments of Earlier Rajasthan Interim Governments". rajassembly.nic.in.
- ↑ "Rajasthan Legislative Assembly". legislativebodiesinindia.nic.in.