வேளச்சேரி (சட்டமன்றத் தொகுதி)
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் 26-ஆவது
வேளச்சேரி, சென்னை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்பில், வேளச்சேரி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இதன் தொகுதி எண் 26. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கும் பகுதிகள்தொகு
சென்னை மாநகராட்சியின் வார்டு எண் 151 முதல் 155 வரையுள்ள பகுதிகள்[1].
வாக்குச் சாவடி எண் 92-க்கு மறு தேர்தல்தொகு
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, இத்தொகுதியின் வாக்குச் சாவடி எண் 92-க்கான தேர்தல் முடிந்த பிறகு, வாக்குச் சாவடி தேர்தல் அலுவலர்கள் தன்னிச்சையாக வாக்களிக்கும் இயந்திரங்களை இருசக்கர வண்டிகளில் ஏற்றிச் சென்றதால் ஏற்பட்ட பதட்டத்தை அடுத்து, இந்த வாக்குச் சாவடிக்கு மட்டும் 17 ஏப்ரல் 2021 அன்று மறு தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. [2]
வெற்றி பெற்றவர்கள்தொகு
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
2011 | எம். கே. அசோக் | அதிமுக | 82,146 | 53.91 | ஜெயராமன் | பாமக | 50,425 | 33.10 |
2016 | வாகை சந்திரசேகர் | திமுக | 70,139 | 40.95 | நீலாங்கரை எம். சி. முனுசாமி | அதிமுக | 61,267 | 35.77 |
2021[3] | ஜே. எம். எச். அசன் மவுலானா | இ.தே.காங்கிரசு | 68,493 | 38.76 | எம். கே. அசோக் | அதிமுக | 64,141 | 36.30 |
மேற்கோள்கள்தொகு
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-01-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ தமிழ்நாடு தேர்தல் 2021: வேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தலுக்கு உத்தரவு
- ↑ வேளச்சேரி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா