ஆர். பி. உதயகுமார்

இந்திய அரசியல்வாதி

ஆர். பி. உதயக்குமார் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ளார்.[1] இவர் பி. காம்., பி. எல்., எம். எஸ். டபிள்யூ படித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பணியாற்றினார். பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு, வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2] இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

ஆர். பி. உதயகுமார்
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 ஜூலை 2022
தலைவர்எடப்பாடி க. பழனிசாமி
முதல்வர்மு. க. ஸ்டாலின்
முன்னையவர்ஓ. பன்னீர்செல்வம்
தொகுதிதிருமங்கலம்

மேற்கோள்கள் தொகு

  1. "சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை உதயகுமாருக்கு ஒதுக்கீடு: ஓபிஎஸ் இருக்கை மாற்றம்". news18 tamil. 2024-02-14. பார்க்கப்பட்ட நாள் 2024-02-14.
  2. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016.
  3. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பி._உதயகுமார்&oldid=3888605" இலிருந்து மீள்விக்கப்பட்டது