மதன் லால் குரானா

இந்திய அரசியல்வாதி

மதன் லால் குரானா (Madan Lal Khurana, 15 அக்டோபர் 1936 - 27 அக்டோபர் 2018)[1] ராஷ்டிரிய சுயம்சேவாக்|ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் ஆவார். தில்லி மாநிலத்தின் முதலமைச்சராக 1993 முதல் 1996 முடிய பதவியில் இருந்தவர். மேலும் இராஜஸ்தான் மாநில ஆளுநர் பதவியில் சனவரி 2004 முதல் நவம்பர் 2004 முடியப் பதவி வகித்தவர். இந்தியப் பிரிவினையின் போது தற்கால பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் தலைநகரமான தில்லி மாநகரத்தின் கீர்த்தி நகரில் குடும்பத்துடன் அகதியாக குடியேறியவர்.[2] மதன்லால் குரானா தனது பட்டப்படிப்பை தில்லியின் கிரோரி மால் கல்லூரியில் முடித்தவர்.[3]

மதன் லால் குரானா
மதன் லால் குரானா
2005 இல் குரானா
இராசசுத்தான் ஆளுநர்
பதவியில்
14 சனவரி 2004 – 1 நவம்பர் 2004
முன்னவர் கைலாசுபதி மிசுரா (கூடுதல் பொறுப்பு)
பின்வந்தவர் டி. வி. இராசேசுவர் (கூடுதல் பொறுப்பு)
3வது தில்லி முதல்வர்
பதவியில்
2 திசம்பர் 1993 – 26 பெப்ரவரி 1996
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி*
பின்வந்தவர் சாகிப் சிங் வர்மா
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 15, 1936(1936-10-15)
பைசலாபாத், பஞ்சாப்
(இன்றைய பைசலாபாத், பாக்கித்தான்) இந்தியாஇந்தியா
இறப்பு அக்டோபர் 27, 2018(2018-10-27) (அகவை 82)
புது தில்லி,இந்தியா
தேசியம் இந்தியாn
இருப்பிடம் புது தில்லி
படித்த கல்வி நிறுவனங்கள் அலகாபாத் பல்கலைக்கழகம்
சமயம் இந்து சமயம்
*தில்லி மாநிலம் கலைக்கப்பட்டது.

ஜன சங்கம்தொகு

அரசியல் களத்திற்கு வருவதற்கு முன்பு விஜய் குமார் மல்ஹோத்திராவுடன் மாலைநேரக் கல்லூரி ஆசிரியராக பணிபுரிந்தவர்.[2][4] பின்னர் தில்லி ஜன சங்கத்தின் பொதுச்செயலராக 1965 முதல் 1967 முடிய செயல்பட்டார்.

பாரதிய ஜனதா கட்சிதொகு

பாரதிய ஜனதா கட்சியின் தில்லி மாநில முதலமைச்சராக 1993 முதல் 1996 முடிய இருந்தவர்.

அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் அமைச்சராக செயல்பட்டவர். பின்னர் இராஜஸ்தான் மாநில ஆளுநராக 14 சனவரி 2004 முதல் 28 அக்டோபர் 2004 முடிய பதவி வகித்தவர். 9, 10, 12 மற்றும் 13வது இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்தவர்.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன்_லால்_குரானா&oldid=3223609" இருந்து மீள்விக்கப்பட்டது