சாகிப் சிங் வர்மா

இந்திய அரசியல்வாதி

சாகிப் சிங் வர்மா (Sahib Singh Verma) இந்திய அரசியல்வாதியாகவும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மூத்த துணைத் தலைவராகவும் இருந்தவர்.[1] சாகி சிங் வர்மா தில்லி மாநிலத்தின் நான்காவது முதலமைச்சராகவும் (1996–1998), இந்திய நாடாளுமன்றத்தின் பதின்மூன்றாவது மக்களவை உறுப்பினராகவும் (1999–2004) பணியாற்றியவர்.[2] இந்திய நடுவண் அரசில் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அமைச்சராகவும் இருந்தவர்.[3]

சாகிப் சிங் வர்மா
நான்காவது முதலமைச்சர், தில்லி
பதவியில்
26 பிப்ரவர் 1996 - 12 அக்டோபர் 1998
முன்னையவர்மதன் லால் குரானா
பின்னவர்சுஷ்மா சுவராஜ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1943-03-15)15 மார்ச்சு 1943
தில்லி, பிரித்தானிய இந்தியா
இறப்பு30 சூன் 2007(2007-06-30) (அகவை 64)
இராஜஸ்தான், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிள்ளைகள்2 மகன்கள், 3 மகள்கள்

சாகிப் சிங் வர்மா தில்லி – ஜெய்பூர் நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் 30 சூன் 2007-இல் இறந்தார்.

இளமையும் கல்வியும் தொகு

சாகிப் சிங் வர்மா ஜாட் இன வேளாண்மைக் குடும்பத்தில், மீர் சிங் – பார்பாய் தேவி இணையருக்கு 15 மார்ச் 1943-இல் தில்லி அருகே முண்டகா எனும் கிராமத்தில் பிறந்தவர்.

சாகிப் சிங் வர்மா இளமையில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து சமூக – அரசியல் பணிகளில் ஈடுபட்டார்.[4]

முதுகலை பட்டப்படிப்பு முடித்து, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்.[5][6] பின்னர் தில்லி சாகித் பகத் சிங் கல்லூரியில் நூலகராகப் பணியில் சேர்ந்தார்.[7]

அரசியல் தொகு

சாகிப் சிங் வர்மா 1977-இல் தில்லி மாநகராட்சி தேர்தலில் ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்றவர். பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்றவர். சாகிப் சிங் வர்மா 1993-இல் மதன் லால் குரானா அமைச்சரவையில் தில்லி மாநில கல்வி மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். 1996-இல் ஊழல் வழக்கில் மதன் லால் குரான பதவி விலகியதை அடுத்து, சாகிப் சிங் வர்மா தில்லி முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.[8] தில்லியில் வெங்காயத் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றத்தின் காரணமாக சாகிப் சிங் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து சுஷ்மா சுவராஜ் முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.

1999-இல் தில்லி புறநகர் தொகுதியிலிருந்து சாகிப் சிங் வர்மா இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இரண்டு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] 2002-இல் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில், இந்திய நடுவண் அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "List of Office Bearers". BJP. Archived from the original on 8 ஏப்ரல் 2007. பார்க்கப்பட்ட நாள் 1 July 2007. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. "Biographical Sketch Member of Parliament 13th Lok Sabha". Archived from the original on 2013-06-01. பார்க்கப்பட்ட நாள் 2017-01-15.
  3. Ranjan, Amitav (21 September 2003). "Sahib Singh wanted to visit Serbia to meet fellow Jats". The Indian Express. http://www.indianexpress.com/oldStory/31955/. பார்த்த நாள்: 11 May 2013. 
  4. Tribune News Service (23 September 2007). "Navjot Sidhu calls for Jat unity". The Tribune (Chandigarh) (Dharamsala). http://www.tribuneindia.com/2007/20070924/himachal.htm#5. பார்த்த நாள்: 26 February 2013. 
  5. http://www.amu.ac.in/pro.jsp?did=10065&lid=Prominent%20Alumni
  6. https://www.quora.com/Why-is-Aligarh-Muslim-University-AMU-so-communal
  7. "Former Delhi CM Sahib Singh Verma dies in road accident". Deccan Herald. 30 June 2007 இம் மூலத்தில் இருந்து 2 ஜூலை 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070702164015/http://www.deccanherald.com/Content/Jun302007/national2007063010305.asp?section=updatenews. பார்த்த நாள்: 4 July 2007. 
  8. The Hindu[தொடர்பிழந்த இணைப்பு]
  9. Swarup, Harihar (10 October 1999). "Long-standing rivals now compete for Cabinet berths" (Editorial). Tribune India. http://www.tribuneindia.com/1999/99oct10/edit.htm. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகிப்_சிங்_வர்மா&oldid=3802131" இலிருந்து மீள்விக்கப்பட்டது