தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடைபெறும் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு அடுத்த நிலையில் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி பிரதான எதிர்க்கட்சி என்கிற தகுதியைப் பெறுகிறது. இத்தகுதியைப் பெற அந்தக் கட்சி குறைந்தது 24 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு - எதிர்க்கட்சித் தலைவர்
TamilNadu Logo.svg
K. Palaniswami.jpg
தற்போது
எடப்பாடி க. பழனிசாமி

11 மே 2021 (2021-05-11) முதல்
உறுப்பினர்
அறிக்கைகள்
நியமிப்பவர்தமிழக சபாநாயகர்
பதவிக் காலம்ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகள்
உருவாக்கம்26 சனவரி 1950
(73 ஆண்டுகள் முன்னர்)
 (1950-01-26)
இணையதளம்www.tn.gov.in

பிரதான எதிர்க்கட்சியின் பேரவைக்குழுத் தலைவர் தமிழ்நாடு சட்டப்பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்று அழைக்கப்படுகிறார். தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவைத் துணைத்தலைவருக்குரிய தகுதியை எதிர்க்கட்சித் தலைவராக உள்ளவர் பெறுகிறார்.

வ. எண் பதவி காலம் எதிர்க்கட்சித் தலைவர் கட்சி
01 2016 முதல் 2021 வரை மு.க.ஸ்டாலின் திமுக
02 2011 முதல் 2016 வரை விஜயகாந்த் தே.மு.தி.க
03 2006 முதல் 2011 வரை ஜெ. ஜெயலலிதா அதிமுக
04 2001 முதல் 2006 வரை க.அன்பழகன் திமுக
05 1996 முதல் 2001 வரை சோ. பாலகிருஷ்ணன் தமாகா
06 1991 முதல் 1996 வரை எஸ். ஆர். பாலசுப்ரமணியன் இதேகா
07 1989 முதல் 1991 வரை எசு. ஆர். இராதா அதிமுக

தற்போது (2021 முதல்) சட்டமன்றத் எதிர்க்கட்சித் தலைவராக, எடப்பாடி க. பழனிசாமி உள்ளார்.

மேற்கோள்கள்தொகு