எசு. ஆர். இராதா
எஸ். ஆர். இராதா (S. R. Radha) ஓர் தமிழக அரசியல்வாதியும் தமிழக அமைச்சரவையின் முன்னாள் அமைச்சரும் ஆவார்.[1] 1934-ல் கும்பகோணத்தில் பிறந்தவர்.[2]
எஸ். ஆர். இராதா | |
---|---|
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1934 |
இறப்பு | 8 டிசம்பர் 2020 |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
இருப்பிடம் | தமிழ்நாடு, ![]() |
பணி | அரசியல் |
சமயம் | இந்து |
1977 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கும்பகோணம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [3] இவர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் கைத்தறி மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சராகவும், 1989ல் அதிமுகவின் ஜா,ஜெ அணிகளின் இணைப்பிற்கு பின் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில்,நடைபெற்ற இடைத்தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார்.[4] [5] பின்னர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினராகதொகு
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1977 | கும்பகோணம் | அஇஅதிமுக | |
1989 | மதுரை கிழக்கு | அஇஅதிமுக | 48.88% |
இறப்புதொகு
வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக் குறைவின் காரணமாகவும் எஸ். ஆர். இராதா தனது 86வது வயதில் 8 டிசம்பர் 2020 அன்று சென்னை மருத்துவமனையில் மறைந்தார்.[6][7][8][9]
மேற்கோள்கள்தொகு
- ↑ 1980 Tamil Nadu Legislative Assembly election - Minister for Environmental Pollution control from 1st July 1983
- ↑ தமிழ்நாடு சட்டமன்ற இணையம் பக்கம் 63
- ↑ 187. KUMBAKONAM S.R. ERADHA
- ↑ Madurai East (Tamil Nadu) Election Results
- ↑ 144 - MADURAI EAST
- ↑ தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா மறைவு
- ↑ தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா மறைவு: முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
- ↑ அதிமுக இரங்கல்
- ↑ Former Minister S.R. Radha dead