சோ. பாலகிருஷ்ணன்

சோமசுந்தரம்.பாலகிருஷ்ணன் என்பார் சோ.பா.[1] (1 சூன் 1936 – 4 சூன் 2006) என அழைக்கப்படும் இந்திய அரசியல்வாதியும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

கல்விதொகு

பாலகிருஷ்ணன் இராமநாதபுரம் மாவட்டம் பி. காமாட்சிபுரத்தில் பிறந்தார். இராமநாதபுரம் சுவார்ட்சு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பினைப் முடித்தப்பின்னர் காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2]

அரசியல்தொகு

பாலகிருஷ்ணன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார். இவர் தமிழக காங்கிரஸ் பிரிவின் தலைவராகவும், 18 ஆண்டுகளாகத் தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் 11வது தமிழக சட்டப்பேரவையில் (1996-2001) எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். [3]

பாலகிருஷ்ணன் 1977 மற்றும் 1991 தேர்தல்களில் [4] [5] முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து இந்தியத் தேசிய காங்கிரஸ் (ஐஎன்சி) வேட்பாளராக[6] [7] தமிழக சட்டப்பேரவைக்கும், 1996இல் இதே தொகுதியிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சி வேட்பாளராகவும்,[8] 2001 தேர்தலில் கடலாடியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [9]

பாலகிருஷ்ணன் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1971 பொதுத் தேர்தலில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 139,276 வாக்குகள் (மொத்தத்தில் 38.87%) இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[10] 1980 மாநிலத் தேர்தல்களில், அவர் முதுகுளத்தூரிலிருந்து போட்டியிட்டு 37,175 வாக்குகளை (44.77%) பெற்று 5536 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். [11] பின்னர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில், முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள கடலடி என்ற கடலோரத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு 32,273 வாக்குகளைப் பெற்றார். இது வெற்றியாளரை விட 409 (0.38%) குறைவாக இருந்தது. இந்த தேர்தலின் போது இத் தொகுதியில் நிராகரிக்கப்பட்ட அல்லது செல்லாததாக அறிவிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 1878 (1.71%). [12]

இறுதி நாட்கள்தொகு

2004ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் நாள் சேதுசமுத்திரம் திட்டம் தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சருடன் சேது சமுத்திரம் கால்வாய் தொடர்பாகக் கலந்துரையாடலுக்குப்பின் இராமேசுவரத்திலிருந்து பரமக்குடிக்குத் திரும்பி வருகையில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றின் காரணமாக தீவிர முள்ளந்தண்டு காயங்கள் பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[13] சிறிது குணமடைந்த அவர், பின் ஏற்பட்ட நீண்டகால நோய் காரணமாக 2006ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் நாள் காலமானார். [1]

அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் பாலகிருஷ்ணன் சட்டசபையில் ஆற்றிய உரைகளை நினைவு கூர்ந்தார். இளம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாலகிருஷ்ணன் ஒரு முன்மாதிரி என்று கூறினார். [14]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "Cong leader S Balakrishnan passes away". One India. 24 June 2006. 2016-12-01 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. (in தமிழ்) தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை “யார்-எவர்”. சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவை துறை. 1977 (published 01.11.1977). பக். 512. 
  3. "Archived copy" (PDF). 4 September 2011 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-10-29 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  4. 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
  5. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2020-10-13 அன்று பார்க்கப்பட்டது.
  6. 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
  7. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2020-10-13 அன்று பார்க்கப்பட்டது.
  8. 1996 Tamil Nadu Election Results, Election Commission of India
  9. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  10. "TitlePage-VolII_LS99.PDF" (PDF). 2016-12-01 அன்று பார்க்கப்பட்டது.
  11. http://eci.nic.in/eci_main/statisticalreports/SE_1980/StatisticalReportTamil%20Nadu%201980.pdf
  12. http://eci.nic.in/eci_main/statisticalreports/SE_1989/StatisticalReportTamilNadu89.pdf
  13. "Tamil Nadu News : Balakrishnan injured in accident". The Hindu. 5 September 2004. 2004-09-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-12-01 அன்று பார்க்கப்பட்டது.
  14. "Archive News". The Hindu. 2007-12-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-12-01 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._பாலகிருஷ்ணன்&oldid=3691012" இருந்து மீள்விக்கப்பட்டது