பி. எச். மனோஜ் பாண்டியன்

இந்திய அரசியல்வாதி

பி. எச். மனோஜ் பாண்டியன் (பிறப்பு: 1971 ஆகத்து 8) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆலங்குளம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2001 சட்டமன்றத் தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முனேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். [1] மேலும் 2010 முதல் 2016 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

பி. எச். மனோஜ் பாண்டியன், எம்.எல்.,
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 மே 2021
முன்னவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா
தொகுதி ஆலங்குளம்
பதவியில்
11 மே 2001 – 8 மே 2006
முன்னவர் பி. வேலுதுரை
பின்வந்தவர் பி. வேலுதுரை
தொகுதி சேரன்மாதேவி
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
30 சூன் 2010 – 29 சூன் 2016
பின்வந்தவர் ஏ. விஜயகுமார்
தொகுதி தமிழ்நாடு
தனிநபர் தகவல்
பிறப்பு 8 ஆகத்து 1971 (1971-08-08) (அகவை 52)
அரசியல் கட்சி அதிமுக
வாழ்க்கை துணைவர்(கள்) தீப்தி மனோஜ் பாண்டியன்
பிள்ளைகள் 2
பெற்றோர் பி. எச். பாண்டியன், (தந்தை)
டாக்டர் சிந்தியா பாண்டியன், (தாய்)
படித்த கல்வி நிறுவனங்கள் பி.எல்., எம்.எல். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தார்
பணி வழக்கறிஞர்

குடும்பம் தொகு

இவர் ஒய். எம். சி.ஏவின் முதல் பொதுச் செயலாளராக இருந்த ராவ் சாகிப் ஜி. சாலமனின் பேரனும்; 1984–89 தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்த டாக்டர் பி. எச். பாண்டியன் மற்றும் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த டாக்டர் சிந்தியா பாண்டியனின் மகனாவார். முன்னணி பெருநிறுவன வழக்கறிஞரும், தமிழக கூடுதல் தலைமை வழக்கறினரான பி. எச். அரவிந்த் பாண்டியன் இவரது சகோதரர் ஆவார். இவருக்கு தீப்தி மனோஜ் பாண்டியன் என்ற மனைவியும், நிரஞ்சனா பாண்டியன், நிவேதனா பாண்டியன் என்ற இரண்டு மகள்கள் உண்டு.

பள்ளிப்படிப்பு தொகு

  • பாலர் கல்வி நிலயம் (அனிதா பள்ளி நர்சரி முதல் 2 ஆம் வகுப்பு வரை )
  • சி. எஸ். ஐ பெயின் பள்ளி, கில்பாக் 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை.
  • டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர், சென்னை (06 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை) [2]

கல்வித் தகுதி தொகு

இளங்கலை சட்டம் (பி. எல்), சென்னை சட்டக் கல்லூரி. எம். எல் (சர்வதேச மற்றும் அரசியலமைப்பு சட்டம்) (சென்னை பல்கலைக்கழகம்). [3]

வகித்த பதவிகள் தொகு

  • இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக 2010 முதல் 2016 வரை
  • நாடாளுமன்ற மனு குழு உறுப்பினர்.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு உறுப்பினர்.
  • குடிமை விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர், .
  • சேரன்மகாதேவி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 2001 முதல் 2006 வரை.
  • தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழுவின் தலைவர்.
  • டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக செனட் குழு உறுப்பினர்
  • முன்னாள் படைவீரர் குழுவில் உறுப்பினர்

கட்சிப் பதவிகள் தொகு

  • 1993 முதல் அதிமுக உறுப்பினர்.
  • வழக்கறிஞர் அணியின் இணை செயலாளராக 2000 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
  • அதிமுக, மாநில வழக்கறிஞர் பிரிவின் செயலாளராக 2007 இல் நியமிக்கப்பட்டார்.
  • தற்போது அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ளார்.

மேற்கோள்கள் தொகு