பி. வேலுதுரை

இந்திய அரசியல்வாதி

பி. வேல்துரை (P. Veldurai) (30 நவம்பர் 1949-24 அக்டோபர் 2023) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

பிறப்பும் இறப்பும் தொகு

வேல்துரை திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகிலுள்ள கங்கனான்குளத்தில் 1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் நாளன்று பிறந்தார். இவர் இளம் அறிவியல் கல்வி பயின்றவர். முதுமை காரணமாக 2023ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாளன்று தனது 73ஆம் வயதில் இறந்தார்.

அரசியல் தொகு

இவர் 1996 மற்றும் 2006 தேர்தல்களில் சேரன்மாதேவி தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

2006 தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: சேரன்மகாதேவி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பி. வேலுதுரை 48,527 43.72% New
அஇஅதிமுக பி. எச். மனோஜ் பாண்டியன் 42,495 38.29% -15.23
தேமுதிக எசு. இராஜேந்திரா நாதன் 8,122 7.32% New
பார்வார்டு பிளாக்கு அ. பரமசிவம் 5,966 5.37% New
பசக எசு. உதயகுமார் 1,920 1.73% New
பா.ஜ.க பி. ஆறுமுகநயினார் 1,626 1.46% -40.27
இலோத ஆர். அச்சுதன் 1,055 0.95% New
சுயேச்சை அ. பால்ரத்தினம் 805 0.73% New
வெற்றி விளிம்பு 6,032 5.43% -6.34%
பதிவான வாக்குகள் 110,996 69.85% 9.52%
பதிவு செய்த வாக்காளர்கள் 158,911
காங்கிரசு gain from அஇஅதிமுக மாற்றம் -9.79%

மேற்கோள்கள் தொகு

  1. "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  3. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 12 May 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வேலுதுரை&oldid=3815553" இலிருந்து மீள்விக்கப்பட்டது