பூங்கோதை ஆலடி அருணா

இந்திய அரசியல்வாதி

பூங்கோதை ஆலடி அருணா ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் முன்னாள் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் இருந்து, 2006 இல் நடந்த தேர்தலில் திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திமுகவின் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். பூங்கோதை, ஒரு தொழில்முறை பெண்கள் சிறப்பு பட்டம் பெற்ற மருத்துவர். இவர் தந்தை ஆலடி அருணா முன்னாள் தமிழக அமைச்சராவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஆலங்குளம் தொகுதியில் இருந்து, திமுக சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பூங்கோதை ஆலடி அருணா
முன்னாள் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத்தின் அமைச்சர்
பதவியில்
13 மே 2006 – 21 மே 2008
பின்னவர்கீதா ஜீவன்
முன்னாள் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
பதவியில்
28 பிப்ரவரி 2009 – 15 மே 2011
முன்னையவர்மு. கருணாநிதி
பின்னவர்ஆர். பி. உதயகுமார்
சட்டமன்ற உறுப்பினரும்
பதவியில்
25 மே 2016 – 6 மே 2021
முன்னையவர்பி. ஜி. ராஜேந்திரன்
பின்னவர்பி. எச். பால் மனோஜ் பாண்டியன்
தொகுதிஆலங்குளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 28, 1964 (1964-10-28) (அகவை 60)
ஆலடிப்பட்டி, ஆலங்குளம், திருநெல்வேலி மாவட்டம்
அரசியல் கட்சிதிமுக
துணைவர்மருத்துவர் வி. பாலாஜி
பெற்றோர்ஆலடி அருணா
கமலா
வேலைமருத்துவர், அரசியல்வாதி
As of 23 February, 2018

குடும்பம்

தொகு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில் அக்டோபர் 28, 1964 இல் பிறந்தார். இவர் மருத்துவ படிப்புக்கு பிறகு லண்டனில் 10 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்தார். இவரது கணவர் மருத்துவர் பாலாஜி நரம்பியல் மருத்துவ நிபுணர். அவர் அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றுகிறார். இவர்களுக்கு சமந்தா மற்றும் காவ்யா என இரு மகள்கள் உள்ளனர்.[1] டாக்டர் பூங்கோதைக்கு மதிவாணன், தமிழ்வாணன், அமுதவாணன், அன்புவாணன், எழில்வாணன் ஆகிய 5 சகோதரர்கள் உள்ளனர்.

ஆதாரம்

தொகு
  1. http://www.viparam.com/2/3/25262.html[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்கோதை_ஆலடி_அருணா&oldid=3789283" இலிருந்து மீள்விக்கப்பட்டது