பெ. கீதா ஜீவன்

இந்திய அரசியல்வாதி
(கீதா ஜீவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெ. கீதா ஜீவன் (Periasamy Geetha Jeevan) என்பவர் தமிழக அரசியில்வாதியும் தமிழ்நாடு அரசின் முன்னாள் சமூகநலத்துறை அமைச்சரும், தற்போதைய சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சசர் ஆவார். இவர் தூத்துக்குடியில் மே 06, 1970 அன்று பிறந்தார்.[2] இவர் தூத்துக்குடியில் ஆங்கிலவழிக் கல்வியளிக்கும் ஒரு பள்ளிக்கூடத்தின் தாளாளராக இருந்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என். பெரியசாமியின் மகள் ஆவார். இவர் இதற்கு முன்பாக 1996 முதல் 2001 வரை உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வுச் செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார்.2006 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டு தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்றார். பின்னர் 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், திமுக கட்சியின் சார்பாக தூத்துக்குடி தொகுதியிலிருந்து, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சசராக பதவியேற்றார்.[4]

பெ. கீதா ஜீவன்
P. Geetha Jeevan
சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
முதன்மை அமைச்சர்மு. க. ஸ்டாலின்
முன்னையவர்வி. சரோஜா
சமூக நலத்துறை அமைச்சர்[1]
பதவியில்
மே 2008 – மே 2011
முதன்மை அமைச்சர்மு. கருணாநிதி
முன்னையவர்பூங்கோதை ஆலடி அருணா
பின்னவர்செல்வி ராமஜெயம்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 மே 2016
தொகுதிதூத்துக்குடி
பதவியில்
மே 2006 – மே 2011
முன்னையவர்எஸ். ராஜம்மாள்
பின்னவர்எஸ். டி. செல்ல பாண்டியன்
தொகுதிதூத்துக்குடி
கால்நடை துறை அமைச்சர்
பதவியில்
மே 2006 – மே 2008
முன்னையவர்பி. வி. தாமோதரன்
பின்னவர்பொங்கலூர் ந. பழனிசாமி
ஊராட்சி மன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2006
தொகுதிதூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றம்
ஊராட்சி மன்றத் தலைவர்
பதவியில்
மே 2016 – 2001
முன்னையவர்எஸ். டி. செல்ல பாண்டியன்
தொகுதிதூத்துக்குடி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 6, 1970 (1970-05-06) (அகவை 54)
தூத்துக்குடி, தமிழ்நாடு, இந்தியா
இறப்புsmall
இளைப்பாறுமிடம்small
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்கள்ஜீவன் ஜேக்கப் ராஜேந்திரன்
பிள்ளைகள்மகிழ்ஜான் சந்தோஷ்
ஜீனா எபி சுந்தரி
பெற்றோர்என்.பெரியசாமி
எபனேசர்
வாழிடம்sதூத்துக்குடி, தமிழ்நாடு, இந்தியா
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்Tmt GEETHA JEEVAN. P

மேற்கோள்கள்

தொகு
  1. "Geetha Jeevan receives Social welfare ministry". Archived from the original on 2008-05-31. பார்க்கப்பட்ட நாள் 2013-11-21.
  2. "முதல்வர், அமைச்சர்கள் பயோ டேட்டா". www.dinakaran.com. Archived from the original on 2021-05-07. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
  3. "தூத்துக்குடி திமுகவில் என். பெரியசாமியின்,குடும்ப ஆதிக்கம் :திமுக நிர்வாகிகள் வேதனை".
  4. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._கீதா_ஜீவன்&oldid=3776800" இலிருந்து மீள்விக்கப்பட்டது