ஓ. பன்னீர்செல்வம் அமைச்சரவை (2016–17)
ஓ. பன்னீர்செல்வம் 2016 திசம்பர் 6 அன்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார். முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் மரணத்தையடுத்து தமிழக முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2017 பிப்ரவரி 16 எடப்பாடி க. பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றதுவரை இவரது அமைச்சரவை தொடர்ந்தது.
உருவான நாள் | 06 டிசம்பர் 2016 |
---|---|
கலைக்கப்பட்ட நாள் | 16 பிப்ரவரி 2017 |
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | ஓ. பன்னீர்செல்வம் |
நாட்டுத் தலைவர் | ஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ் |
சட்ட மன்றத்தில் நிலை | பெரும்பான்மை அரசு |
எதிர் கட்சி | திமுக |
எதிர்க்கட்சித் தலைவர் | மு. க. ஸ்டாலின் (துணைத்தலைவர் துரைமுருகன்) |
வரலாறு | |
தேர்தல்(கள்) | 2016 |
Legislature term(s) | 5 வருடம் |
அடுத்த | எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை |
அமைச்சரவை
தொகுஅமைச்சரவை 2016 திசம்பர் 6 அன்று இருந்தவாறு:[2]
வ. எண் | அமைச்சர் பெயர் | ஒளிப்படம் | அமைச்சர் | கவனிக்கும் துறைகள் |
---|---|---|---|---|
1. | ஓ. பன்னீர்செல்வம் | முதலமைச்சர் | பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை,உள்துறை, நிதி, திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தம் (பயிற்சி). | |
2. | திண்டுக்கல் சீனிவாசன் | வனத்துறை அமைச்சர் | வனத்துறை | |
3. | எடப்பாடி க. பழனிசாமி | பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் | பொதுப்பணிகள், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம் மற்றும் செயற் திட்டப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் | |
4. | செல்லூர் கே. ராஜூ | கூட்டுறவுத் துறை அமைச்சர் | கூட்டுறவு, புள்ளியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன் | |
5. | பி. தங்கமணி | மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் | மின்சாரம், மரபுசார எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கரும்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்), ஊழல் தடுப்புச் சட்டம் | |
6. | எஸ். பி. வேலுமணி | நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் | நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள், நகர்ப்பகுதி, ஊரகக் குடிநீர் வழங்கல், சிறப்புத் திட்ட செயலாக்கம். | |
7. | டி. ஜெயக்குமார் | மீன்வளத் துறை அமைச்சர் | மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் | |
8. | சி. வே. சண்முகம் | சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத் துறை அமைச்சர் | சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் | |
9. | கே. பி. அன்பழகன் | உயர்கல்வித் துறை அமைச்சர் | தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி , மின்னணுவியல், அறிவியல் & தொழில் நுட்பவியல். | |
10. | மருத்துவர் வி. சரோஜா | சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் | மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம். | |
11. | எம். சி. சம்பத் | தொழில்துறை அமைச்சர் | தொழில்கள் ,சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் | |
12. | கே. சி. கருப்பண்ணன் | சுற்றுச்சூழல் துறை அமைச்சர் | சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு | |
13. | ஆர். காமராஜ் | உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர் | உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு | |
14. | ஓ. எஸ். மணியன் | கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் | கைத்தறி மற்றும் துணிநூல் | |
15. | உடுமலை கே. ராதாகிருஷ்ணன் | வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் | வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இடவசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப்பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் | |
16. | மருத்துவர் சி. விஜயபாஸ்கர் | மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் | மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன் | |
17. | இரா. துரைக்கண்ணு | வேளாண்துறை அமைச்சர் | வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளான் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு | |
18. | கடம்பூர் ராஜு | செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் | செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச்சட்டம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம் | |
19. | ஆர். பி. உதயகுமார் | வருவாய்த்துறை அமைச்சர் | வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு. | |
20. | வெல்லமண்டி நடராசன் | சுற்றுலாத்துறை அமைச்சர் | சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் | |
21. | கே. சி. வீரமணி | வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் | வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம். | |
22. | மாஃபா பாண்டியராஜன் | பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் | பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை | |
23. | கே. டி. ராஜேந்திர பாலாஜி | பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் | பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி | |
26. | பி. பெஞ்சமின் | ஊரகத் தொழில்துறை அமைச்சர் | ஊரகத் தொழில்கள்,குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள் | |
27. | மருத்துவர் நிலோபர் கபில் | தொழிலாளர் நலத்துறை அமைச்சர் | தொழிலாளர்கள் நலன், மக்கள்தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வஃக்ப் வாரியம். | |
28. | எம். ஆர். விஜயபாஸ்கர் | போக்குவரத்துத் துறை அமைச்சர் | போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்திச் சட்டம் | |
29. | மருத்துவர் எம். மணிகண்டன் | தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் | தகவல் தொழில்நுட்பம் | |
30. | வி. எம். ராஜலட்சுமி | ஆதி திராவிடரர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை | ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன் | |
31. | ஜி. பாஸ்கரன் | காதி மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் | காதி மற்றும் கிராம தொழில் மற்றும் பூதானம் மற்றும் கிராம தானம் | |
32. | சேவூர் ராமச்சந்திரன் | இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் | இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடு | |
32. | எஸ். வளர்மதி | பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் | பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன். | |
33. | பாலகிருஷ்ணா ரெட்டி | கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் | கால்நடை பராமரிப்பு |