பி. பெஞ்சமின்

இந்திய அரசியல்வாதி

பி. பெஞ்சமின் என்பவர் தமிழக அரசில்வாதியாவார். இவர் சென்னை அருகே உள்ள அயனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் பாண்டியன். தாயார் பெயர் சுந்தரியம்மாள். இவர் ஆரம்ப கல்வியை அயனம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் பயின்று, அஞ்சல் மூலம் பி.ஏ. பட்டம் பெற்றுள்ளார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர். 1988 ஆம் ஆண்டு அ.தி.மு.க. வில் இணைந்தார். 15 ஆண்டுகள் வில்லிவாக்கம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றி உள்ளார். சென்னை 145-வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு, மாநகராட்சி துணை மேயராக பதவியேற்றார். 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற இவர் பள்ளி கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி. 2016 மே 29. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._பெஞ்சமின்&oldid=3943970" இலிருந்து மீள்விக்கப்பட்டது