பி. தங்கமணி

இந்திய அரசியல்வாதி

பி. தங்கமணி ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார்.[1] இவரின் சொந்த ஊர் பள்ளிபாளையம் அருகேயுள்ள ஆலம்பாளையம் ஆகும். 2011 ஆண்டு குமாரபாளையம் சட்ட மன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினர் ஆன இவர் 2011 தமிழக அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2006இல் நடந்த தேர்தலில் திருச்செங்கோடு சட்ட மன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் குமாரபாளையம் சட்ட மன்றத் தொகுதியில் வெற்றி பெற்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.[2] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் குமாரபாளையம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "திரு பி.தங்கமணி". தமிழ்நாடு அரசு. 6 ஏப்ரல் 2016. Retrieved 7 ஏப்ரல் 2016.
  2. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கைக் குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. Archived from the original on 2016-05-25. Retrieved 29 மே 2016.
  3. "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._தங்கமணி&oldid=4177038" இலிருந்து மீள்விக்கப்பட்டது