கே. சி. கருப்பண்ணன்

இந்திய அரசியல்வாதி

கே. சி. கருப்பண்ணன் (K.C.Karuppannan, பிறப்பு:ஆகத்து 20, 1957) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். பள்ளி இறுதிவரை படித்துள்ளார். இவரது தொழில் விவசாயம் மற்றும் கல்வி நிறுவனம் நடத்துதல் ஆகும்.[1] இவர் 1972இல் கவுந்தப்பாடியை அடுத்த காட்டுவலசு கிளைச் செயலாளராக அரசியல்வாழ்வைத் துவக்கினார். 2001 முதல் 2006வரை பவானி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த இவர் பின் 2006 ஆண்டு தேர்தலில் பவானி தொகுதியில் தோல்வியுற்றார். 2011 ஆண்டு பவானி நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆண்டு சட்டப்பேரவைக்கு பவானி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தமிழக அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016.
  2. http://www.tn.gov.in/government/cabinetministers
  3. "ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 13 புதுமுகங்கள் இவர்கள்தான்!". ஒன் இந்தியா. 21 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சி._கருப்பண்ணன்&oldid=3943471" இலிருந்து மீள்விக்கப்பட்டது