ஆர். காமராஜ்
இந்திய அரசியல்வாதி
ஆர். காமராஜ் (R. Kamaraj) ஓர் தமிழக அரசியல்வாதி. 2011 ஆண்டு சட்டப்பேரவைக்கு நன்னிலம் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு,[1] தமிழக அரசின் உணவுத் துறை அமைச்சராக பணியாற்றினார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர். 2016 ஆண்டு மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உணவுத் துறை அமைச்சராக இருந்த புத்திசந்திரனுக்குப் பதிலாக காமராஜ், தமிழ்நாடு அரசாங்கத்தின் உணவுத் துறை அமைச்சராகப் பதவியேற்றார். ஐந்து மாத காலப்பகுதியில் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது அமைச்சரவை மாற்றத்தில் இவர் நியமிக்கப்பட்டார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
- ↑ "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.
- ↑ "Jayalalithaa sacks six Tamil Nadu ministers". NDTV. PTI. 4 November 2011. http://www.ndtv.com/india-news/jayalalithaa-sacks-six-tamil-nadu-ministers-572958.