சி. வே. சண்முகம்

இந்திய அரசியல்வாதி

சி. வே. சண்முகம் (C. V. Shanmugam) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் சட்டப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இவருடைய தந்தை வேணுகோபால் வந்தவாசி தொகுதி எம்.பி. யாகவும், ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட அமைப்பாளராகவும் இருந்துள்ளார்.[1] இவர் 2011 மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் விழுப்புரம் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2] தமிழக அரசின் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு மற்றும் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[3] 2016-2021 ஆண்டு வரை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.

நாடாளுமன்ற உறுப்பினர்தொகு

சி. வே. சண்முகம் 2022ஆம் ஆண்டு சூன் மாதம் நடைபெற இருந்த நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள்தொகு

  1. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. 29 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. 2013-04-02 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2011-12-10 அன்று பார்க்கப்பட்டது.
  3. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. 2011-08-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-10 அன்று பார்க்கப்பட்டது.
  4. Ali, Noorul Ahamed Jahaber (2022-06-03). "திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளில் 6 பேர் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு" (in ta). https://tamil.oneindia.com/news/chennai/rajya-sabha-election-dmk-admk-congress-party-s-6-candidates-choosen-as-mps-460786.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._வே._சண்முகம்&oldid=3628965" இருந்து மீள்விக்கப்பட்டது