மாஃபா பாண்டியராஜன்

மாஃபா பாண்டியராஜன் என்பவர் ஒரு தமிழ்நாட்டு பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டு அமைச்சரவையில் ஆகத்து 30, 2016 முதல் 06 மே 2021 வரை பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக செயல்பட்டார்.

அரசியல் வாழ்க்கை தொகு

இவர் முதலில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தன் அரசியல் வாழ்வைத் துவக்கினார். பின்னர் தேமுதிக வில் இணைந்து 2009 ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பின்னர் சில ஆண்டுகளில் தேமுதிக தலைமைமீது அதிருப்தியுற்று, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்து, பேரவையில் தேமுதிக அதிருப்தி உறுப்பினராக செயற்பட்டார். 2016 ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் இணைந்து, ஆவடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 ஆகத்து 30 அன்று தமிழக அமைச்சரவையில் அமைச்சராக சேர்க்கப்பட்டார். [1] அ.தி.மு.க வில் உள்கட்சி பிரச்சனை ஏற்பட்டபோது இவர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையலான புரட்சித் தலைவி அம்மா அணியில் இணைந்து செயல்பட்ட காரணத்தால் சசிகலாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதனால் 2017 பெப்ரவரி 16 அன்று எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் அமைந்த புதிய அமைச்சரவையில் பாண்டியராஜன் சேர்க்கப்படவில்லை.

இரண்டாம் முறையாக அமைச்சர் தொகு

அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓ பன்னீர் செல்வம் அணியும் 2017 ஆகத்து 21 இல் இணைந்ததை அடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது அதன்படி மாஃபா பாண்டியராஜன் மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு அவருக்கு தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய அமைச்சராகிறார் மாஃபா பாண்டியராஜன் - இன்று மாலை பதவியேற்பு விழா". செய்தி. தி இந்து. 30 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2016.
  2. "அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன: ஓபிஎஸ் துணை முதல்வராகிறார்; சசிகலாவை நீக்க நடவடிக்கை". செய்தி. தி இந்து. 22 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 23 ஆகத்து 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஃபா_பாண்டியராஜன்&oldid=3622370" இலிருந்து மீள்விக்கப்பட்டது