சேவூர் ராமச்சந்திரன்

இந்திய அரசியல்வாதி

சேவூர் எஸ். ராமச்சந்திரன் (Sevvoor S. Ramachandran, பிறப்பு: 23 பிப்ரவரி 1960) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

சேவூர்.இராமச்சந்திரன்
ஆரணி சட்டமன்ற உறுப்பினர்
தமிழ்நாடு அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், தமிழ்நாடு
பதவியில்
2016 –  2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 23, 1960 (1960-02-23) (அகவை 64)
சேவூர், ஆரணி வட்டம், திருவண்ணாமலை, தமிழ்நாடுஇந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சி அதிமுக
துணைவர்ரா.மணிமேகலைஇராமச்சந்திரன்
பிள்ளைகள்ரா. சந்தோஷ்குமார்
ரா. விஜயகுமார்
பெற்றோர்
  • பி. எம். சோமசுந்தர முதலியார்
    சோ. மரகதம் (தந்தை)
வாழிடம்(s)சேவூர், ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்,தமிழ்நாடு, இந்தியா

குடும்பம்

தொகு

இவரது தந்தை பி. எம். சோமசுந்தர முதலியார் மற்றும் தாயார் மரகதம் ஆகியோர் ஆவர். இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூர் ஆகும். இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு மணிமேகலை என்னும் மனைவியும், சந்தோஷ்குமார் மற்றும் விஜயகுமார் என இரு மகன்களும் உள்ளனர். இவர் செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்.[1]

அரசியல் வாழ்க்கை

தொகு

1996 - 2001 வரை ஒன்றியக்குழு உறுப்பினராகவும், 2000 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா பேரவையின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலராகவும் மற்றும் 2006 - 2011 வரை சேவூர் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்துள்ளார். பின்னர் 2016 ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஆரணி தொகுதியிலிருந்து, அதிமுக சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தமிழக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆரணி தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் சுயவிவரம்". தினமணி: pp. 5. 5 April 2016. https://www.dinamani.com/all-sections/tn-election-2016/2016/apr/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1307900.html. 
  2. "புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
  3. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவூர்_ராமச்சந்திரன்&oldid=3943645" இலிருந்து மீள்விக்கப்பட்டது