ஜி. பாஸ்கரன்

ஜி. பாஸ்கரன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். இவரது பெற்றோர் கணபதி அம்பலம், இருளாயி அம்மாள் ஆவர் இவர் பத்தாம்வகுப்புவரை படித்துள்ளார். இவரது தொழில் வேளாண்மை. இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும், இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.[1] இவர் அமைச்சராவதற்கு முன் கட்சியில் சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி செயலராக இருந்தார். சிவகங்கை ஒன்றியக் குழுத் தலைவராகப் பணியாற்றினார்.[2] இவர் 2016 ஆண்டு தமிழக சட்டமன்றத்துக்கு சிவகங்கை சட்டமன்றத்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அமைச்சரவையில் 2016 ஆண்டு காதி மற்றும் கதர்கிராமத் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "சிவகங்கை மாவட்ட அதிமுக வேட்பாளர்கள்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
  2. "புதிய அமைச்சர்களின் வாழ்க்கைக் குறிப்பு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
  3. "முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு". தி இந்து (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._பாஸ்கரன்&oldid=4177051" இலிருந்து மீள்விக்கப்பட்டது