எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை

க. பழனிச்சாமி தமிழ்நாட்டின் முதலமைச்சராக 16 பிப்ரவரி 2017ல் பதவியேற்றார்.[1][2][3][4]  17 வருட சொத்துக்குவிப்பு வழக்கில் வி. கே. சசிகலா  குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதால் பிப்ரவரி 14, 2017ல் அஇஅதிமுகவின் சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உருவான நாள்17 பிப்ரவரி 2017
கலைக்கப்பட்ட நாள்02 மே 2021
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்எடப்பாடி க. பழனிசாமி
நாட்டுத் தலைவர்ஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ் (6 அக்டோபர் 2017 வரை)
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
சட்ட மன்றத்தில் நிலைபெரும்பான்மை அரசு
எதிர் கட்சிதிமுக
எதிர்க்கட்சித் தலைவர்மு. க. ஸ்டாலின் (துணைத்தலைவர் துரைமுருகன்)
வரலாறு
தேர்தல்(கள்)2016
Legislature term(s)5 வருடம்
முந்தையஓ. பன்னீர்செல்வம் மூன்றாவது அமைச்சரவை
அடுத்தமு. க. ஸ்டாலின் அமைச்சரவை
துறை அமைச்சர் கவனிக்கும் துறைகள் பதவி காலம்
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை,உள்துறை,பொதுப்பணிகள், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம் மற்றும் செயற் திட்டப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் 2017 பிப்ரவரி 16 முதல்
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நிதி, திட்டமிடல், சட்டமன்றம், தேர்தல், கடவுச்சீட்டு, வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இடவசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப்பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் 2017 ஆகத்து 21 முதல்
தமிழ் மொழித் துறை மாஃபா பாண்டியராஜன் தமிழ் மொழித்துறை 2017 ஆகத்து 21 முதல்
வனத்துறை திண்டுக்கல் சி. சீனிவாசன் வனத்துறை 2017 பிப்ரவரி 16 முதல்
பள்ளிக் கல்வித் துறை கே. ஏ. செங்கோட்டையன் பள்ளிக் கல்வித் துறை 2017 பிப்ரவரி 16 முதல்
கூட்டுறவு செல்லூர் கே. ராஜூ கூட்டுறவு, புள்ளியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன் 2017 பிப்ரவரி 16 முதல்
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை பி. தங்கமணி மின்சாரம், மரபுசார எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கரும்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்), ஊழல் தடுப்புச் சட்டம் 2017 பிப்ரவரி 16 முதல்
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி எஸ். பி. வேலுமணி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள், நகர்ப்பகுதி, ஊரகக் குடிநீர் வழங்கல், சிறப்புத் திட்ட செயலாக்கம். 2017 பிப்ரவரி 16 முதல்
மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை டி. ஜெயக்குமார் பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தம் (பயிற்சி), மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் 2017 பிப்ரவரி 16 முதல்
சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் சி. வே. சண்முகம் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள், சுரங்கம் மற்றும் கனிமவளம் துறை 2017 பிப்ரவரி 16 முதல்
உயர்கல்வி கே. பி. அன்பழகன் தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி , மின்னணுவியல், அறிவியல் & தொழில் நுட்பவியல், வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளான் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு. 2017 பிப்ரவரி 16 முதல்
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம் மருத்துவர் வி. சரோஜா மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம். 2017 பிப்ரவரி 16 முதல்
தொழில்துறை எம். சி. சம்பத் தொழில்கள் 2017 பிப்ரவரி 16 முதல்
சுற்றுச்சூழல் துறை கே. சி. கருப்பண்ணன் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு 2017 பிப்ரவரி 16 முதல்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் ஆர். காமராஜ் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு 2017 பிப்ரவரி 16 முதல்
கைத்தறி மற்றும் துணிநூல் ஓ. எஸ். மணியன் கைத்தறி மற்றும் துணிநூல் 2017 பிப்ரவரி 16 முதல்
கால்நடைப் பராமரிப்பு உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கால்நடைப் பராமரிப்பு 2017 பிப்ரவரி 16 முதல்
மக்கள் நல்வாழ்வு மருத்துவர் சி. விஜயபாஸ்கர் மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன் 2017 பிப்ரவரி 16 முதல்
செய்தி கடம்பூர் ராஜு செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச்சட்டம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம் 2017 பிப்ரவரி 16 முதல்
வருவாய் ஆர். பி. உதயகுமார் வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு, தகவல் தொழில்நுட்பம் 2017 பிப்ரவரி 16 முதல்
சுற்றுலா வெல்லமண்டி என். நடராஜன் சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் 2017 பிப்ரவரி 16 முதல்
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு கே. சி. வீரமணி வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம். 2017 பிப்ரவரி 16 முதல்
ஊரகத் தொழில் பி. பெஞ்சமின் ஊரகத் தொழில்கள்,குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள் 2017 பிப்ரவரி 16 முதல்
பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி கே. டி. ராஜேந்திர பாலாஜி பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி 2017 பிப்ரவரி 16 முதல்
தொழிலாளர் நலன் மருத்துவர் நிலோபர் கபில் தொழிலாளர்கள் நலன், மக்கள்தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வஃக்ப் வாரியம். 2017 பிப்ரவரி 16 முதல்
போக்குவரத்து எம். ஆர். விஜயபாஸ்கர் போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்திச் சட்டம் 2017 பிப்ரவரி 16 முதல்
ஆதி திராவிடரர் வி. எம். ராஜலட்சுமி ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன் 2017 பிப்ரவரி 16 முதல்
காதி மற்றும் கிராம தொழில் ஜி. பாஸ்கரன் காதி மற்றும் கிராம தொழில் மற்றும் பூதானம் மற்றும் கிராம தானம் 2017 பிப்ரவரி 16 முதல்
இந்து சமயம் மற்றும் அறநிலையம் சேவூர் எஸ். ராமச்சந்திரன் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடு 2017 பிப்ரவரி 16 முதல்
பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலன் எஸ். வளர்மதி பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன். 2017 பிப்ரவரி 16 முதல்


 • அதிமுகவின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பெப்ரவரி 16, 2017 அன்று பொறுப்பேற்றதையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்தார். அவரது அணிக்கு ஆதரவு அளித்த மாஃபா பாண்டியராஜன் புதிய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு பதில் கே. ஏ. செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
 • அதிமுகவின் பழனிச்சாமி அணியும் ஓ. பன்னீர்செல்வம் அணியும் 2017 ஆகத்து 21 இல் இணைந்ததை அடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது, அதன்படி ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், நிதி மற்றும் வீட்டு வசதித் துறைகளும் ஒதுக்கப்பட்டன. பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் நலன் மேம்பாடு, விளையாட்டுத் துறை அமைச்சராகவும், சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகத்துக்கு, எம்.சி. சம்பத்திடம் இருந்த சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை கூடுதலாக வழங்கப்பட்டது. மாஃபா பாண்டியராஜன் மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டது.[5]
 • ஆகத்து 22, 2017 அன்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு கூடுதலாக திட்டமிடல், சட்டமன்றம், தேர்தல், கடவுச்சீட்டு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன.[6]
 • 2019 சனவரி ஏழு அன்று சிறப்பு நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால் விளையாட்டு இளைஞர் நலன் மேம்பாடு அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி தனது அமைச்சர் பதவியை விட்டு விலகினார்.[7]
 • தகவல் தொழல் தொழில் நுட்பத் துறை அமைச்சராக இருந்த செ. மு. மணிகண்டன் 2019 ஆகத்து 7 அன்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவரது துறையானது கூடுதலாக ஆர். பி. உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.[8]
 • அதிமுகவின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பெப்ரவரி 16, 2017 அன்று பொறுப்பேற்றதையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்தார். அவரது அணிக்கு ஆதரவு அளித்த மாஃபா பாண்டியராஜன் புதிய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு பதில் கே. ஏ. செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
 • அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓ. பன்னீர்செல்வம் அணியும் 2017 ஆகத்து 21 இல் இணைந்ததை அடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது, அதன்படி ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், நிதி மற்றும் வீட்டு வசதித் துறைகளும் ஒதுக்கப்பட்டன. பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் நலன் மேம்பாடு, விளையாட்டுத் துறை அமைச்சராகவும், சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகத்துக்கு, எம்.சி. சம்பத்திடம் இருந்த சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை கூடுதலாக வழங்கப்பட்டது. மாஃபா பாண்டியராஜன் மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டது.[10]
 • ஆகத்து 22, 2017 அன்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு கூடுதலாக திட்டமிடல், சட்டமன்றம், தேர்தல், கடவுச்சீட்டு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன.[11]
 • 2019 சனவரி ஏழு அன்று சிறப்பு நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால் விளையாட்டு இளைஞர் நலன் மேம்பாடு அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி தனது அமைச்சர் பதவியை விட்டு விலகினார்.[12]
 • தகவல் தொழல் தொழில் நுட்பத் துறை அமைச்சராக இருந்த செ. மு. மணிகண்டன் 2019 ஆகத்து 7 அன்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவரது துறையானது கூடுதலாக ஆர். பி. உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.[13]

சாதனைகள் தொகு

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக் காலத்தில் குடிமராமத்துப் பணி, ஃபேம் இந்தியா திட்டம், அம்மா ரோந்து வாகனம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தார்.

2019 ஆம் ஆண்டில் அவர் தமிழ்நாட்டில் அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பதற்காக அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் 13 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் அங்கு உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதற்காக யாதும் ஊரே திட்டத்தை (புறநானூறு 192ஐ அடிப்படையாகக் கொண்டு) தொடங்கினார்.[15] பயணத்தின் போது அவர் 3 லட்சம் கோடி மதிப்பிலான அன்னிய முதலீட்டைப் பெற்றார், இது அவரது முன்னோடி ஜெயலலிதா செய்ததை விடவும் அதிகம்.

பிப்ரவரி 2020 இல், பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் சார்பில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.[16][17][18]

2020 ஆம் ஆண்டில், பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, அரசு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5% இடஒதுக்கீட்டிற்கு ஆணை பிறப்பித்தது.[19] பள்ளி மாணவர்கள். புதிதாக உருவாக்கப்பட்ட 11 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அவர் நடவடிக்கை எடுத்தார், அப்போது இருந்த 3,400 இடங்களுக்கு 1,650 இடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.[20][21]

அக்டோபர் 2020 இல் பொது விவகார மையத்தால் வெளியிடப்பட்ட பொது விவகாரக் குறியீடு-2020 இன் படி, அவரது ஆட்சியின் கீழ், நிலையான வளர்ச்சியின் பின்னணியில் ஒருங்கிணைந்த குறியீட்டின் அடிப்படையில் தமிழ்நாடு சிறந்த ஆட்சி செய்யும் மாநிலமாக மதிப்பிடப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் போது. தொற்றுநோய் காலத்தில் எதிர்மறையான வளர்ச்சியை பதிவு செய்யாத சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.

அவரது ஆட்சியின் போது, ​​தமிழ்நாடு 2018 முதல் 2021 வரை ஒட்டுமொத்தமாக சிறப்பாகச் செயல்படும் பெரிய மாநிலமாக இருந்தது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி $290 பில்லியன் அல்லது ரூ. 21.6 லட்சம் கோடியுடன், தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறியது.[22][23][24]

2020 ஆம் ஆண்டில், இந்தியா டுடேயின் “மாநிலங்களின் மாநிலங்கள்” ஆய்வில், பொருளாதாரம், சுற்றுலா, உள்கட்டமைப்பு, உள்ளடக்கிய மேம்பாடு, சட்டம் மற்றும் ஒழுங்கு, தொழில்முனைவோர் உட்பட மொத்தம் 12 பிரிவுகளில் 11 பிரிவுகளில் பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தூய்மை, சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம். தமிழகம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த அங்கீகாரத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.[24]

மேற்கோள்கள் தொகு

 1. 31-member Palaniswami cabinet to be sworn-in at 4.30pm
 2. Edappadi Palaniswami sworn in as Tamil Nadu CM, Sasikala’s family takes front row seats
 3. Five wise men holding Sasikala's flock of lawmakers together
 4. As rumours swell, Sengottaiyan denies he is CM candidate
 5. "அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன: ஓபிஎஸ் துணை முதல்வராகிறார்; சசிகலாவை நீக்க நடவடிக்கை". செய்தி. தி இந்து. 22 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 23 ஆகத்து 2017.
 6. "துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு". செய்தி. தி இந்து. 23 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 23 ஆகத்து 2017.
 7. "சிறைத் தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா!". என்.டி.டி.வி. https://www.ndtv.com/tamil/minister-balakrishna-reddy-resigns-1974082. பார்த்த நாள்: 7 January 2019. 
 8. "அமைச்சர் மணிகண்டன்: தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் - காரணம் என்ன?". செய்தி. பிபீசி. 7 ஆகத்து 2019. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகத்து 2019.
 9. அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பு: வேளாண் துறை ஒதுக்கீடு, இந்து தமிழ் , 2020 நவம்ப்ர் 1
 10. "அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன: ஓபிஎஸ் துணை முதல்வராகிறார்; சசிகலாவை நீக்க நடவடிக்கை". செய்தி. தி இந்து. 22 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 23 ஆகத்து 2017.
 11. "துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு". செய்தி. தி இந்து. 23 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 23 ஆகத்து 2017.
 12. "சிறைத் தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா!". என்.டி.டி.வி. https://www.ndtv.com/tamil/minister-balakrishna-reddy-resigns-1974082. பார்த்த நாள்: 7 January 2019. 
 13. "அமைச்சர் மணிகண்டன்: தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் - காரணம் என்ன?". செய்தி. பிபீசி. 7 ஆகத்து 2019. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகத்து 2019.
 14. அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பு: வேளாண் துறை ஒதுக்கீடு, இந்து தமிழ் , 2020 நவம்ப்ர் 1
 15. "After tapping silicon valley, TN eyes Tamil diaspora in 38 countries". The New Indian Express. 27 October 2020. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/oct/27/after-tapping-silicon-valley-tn-eyes-tamil-diaspora-in-38-countries-2215428.html. 
 16. "Cauvery delta to be declared a protected agriculture zone" (in en-IN). The Hindu. 10 February 2020. https://www.thehindu.com/news/national/tamil-nadu/cauvery-delta-to-be-declared-a-protected-agriculture-zone/article30778695.ece. 
 17. "Tamil Nadu declares Cauvery delta a protected agricultural zone" (in en-IN). hindustan times. 10 February 2020. https://www.hindustantimes.com/india-news/tamil-nadu-declares-cauvery-delta-a-protected-agricultural-zone/story-Xu1rVqg7eFoJza6wrKrJAK.html. 
 18. "Rules notified for Delta Agri Zone Act" (in en-IN). new indian express. 27 August 2020. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/aug/27/rules-notified-for-delta-agri-zone-act-2188823.html. 
 19. PTI (29 October 2020). "Tamil Nadu Govt Passes Order for 7.5% Quota in Medical Admissions for Govt School Students". News18. https://www.news18.com/news/india/tamil-nadu-govt-passes-order-to-implement-7-5-quota-in-medical-admissions-for-govt-school-students-3022247.html. 
 20. IANS (26 October 2020). "Tamil Nadu govt to set up medical colleges in 11 districts, add 1,650 seats". Business Standard. https://www.business-standard.com/article/current-affairs/tamil-nadu-govt-to-set-up-medical-colleges-in-11-districts-add-1-650-seats-120102600585_1.html. 
 21. "Tamil Nadu has 3,400 MBBS seats now and will add 1,650 in future: CM". The Hindu. 26 October 2020. https://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-has-3400-mbbs-seats-now-and-will-add-1650-in-future-cm/article32943453.ece. 
 22. Menon, Amarnath (27 November 2021). "Best performing big state overall: Tamil Nadu". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 May 2022.
 23. "T.N. tops in 'State of the States' study" (in en-IN). The Hindu. 27 November 2020. https://www.thehindu.com/news/national/tamil-nadu/tn-tops-in-state-of-the-states-study/article33197263.ece. 
 24. 24.0 24.1 "Tamil Nadu bags best performer award, again" (in en-IN). New Indian Express. 28 November 2021. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/nov/28/state-bags-best-performer-award-again-2229024.html.