கே. ஏ. செங்கோட்டையன்

அதிமுக அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரும்

கே. ஏ. செங்கோட்டையன் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]

கே. ஏ. செங்கோட்டையன்
பள்ளிக் கல்விதுறை அமைச்சர்
பதவியில்
16 மே 2017 – 7 மே 2021
வேளான்துறை அமைச்சர்
பதவியில்
15 மே 2011 – 14 ஜூலை 2011
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
பதவியில்
15 ஜூலை 2011 – 7 நவம்பர் 2012
போக்குவரத்துத்துறை அமைச்சர்
பதவியில்
24 ஜூன் 1991 – 1996
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1977-1980,

1980-1984, 1984-1989, 1989-1991, 1991-1996, 2006-2011, 2011-2016,

2016-
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 சனவரி 1948 (1948-01-09) (அகவை 76)
குள்ளம்பாளையம், சென்னை மாநிலம், இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்s

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்த இவர் 9 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முறையாக 1977-ல் சத்தியமங்கலத்திலிருந்தும், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக செயலலிதா அணி, சானகி அணி என பிரிந்திருந்த போது செயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிச்செட்டிபாளையத்தில் வென்றார். தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத்தில் வனத்துறை அமைச்சராகவும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தார்.[2] தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தில் விவசாயத் துறை அமைச்சராகவும், பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், அதையடுத்து வருவாய்த் துறை அமைச்சராகவும் பணியாற்றி வ‌ந்தா‌ர்.[3][4]

2017 ஆண்டு பெப்ரவரி மாதம் எடப்பாடி க. பழனிசாமி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[5] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[6]

இவரின் தந்தை அர்த்தனாரிக்கவுண்டர், மனைவி ஈசுவரி, மகன் கதிர் ஆவார்கள்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
  2. வனத்துறை போக்குவரத்துத் துறை
  3. வெப்துனியா
  4. வேளாண் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை , வருவாய்த் துறை - விகடன்[தொடர்பிழந்த இணைப்பு]
  5. http://www.tn.gov.in/ta/ministerslist
  6. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
  7. http://www.elections.tn.gov.in/Affidavits/106/SENGOTTAIYAN_KA.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஏ._செங்கோட்டையன்&oldid=3943458" இலிருந்து மீள்விக்கப்பட்டது