பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலை
பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலை அல்லது பெங்களூர் மத்தியச் சிறைச்சாலை (Central Prison, Bangalore) கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் அமைந்த பெரிய சிறைச்சாலை ஆகும். [1]இச்சிறைச்சாலை பெங்களூர் – ஒசூர் சாலையில் உள்ள பரப்பன அக்ரகாரம் எனுமிடத்தில் 1997-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இச்சிறைச்சாலையை, 2000-ஆம் ஆண்டில் மத்தியச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.[2][3] 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இச்சிறைச்சாலையில் 2,200 சிறைவாசிகளை தங்க வைக்க வசதியுள்ளது. இச்சிறைச்சாலையில், 2016-ஆம் ஆண்டில் 4,400-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இச்சிறையில் பெண் சிறைவாசிகளையும் தங்க வைக்க வசதி உள்ளது.[4] கர்நாடக மாநில நீதிமன்றங்களின் விசாரணை கைதிகளும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களும் இச்சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார்கள்.
இடம் | பரப்பன அக்ரகாரம், பெங்களூர், கர்நாடகா, இந்தியா |
---|---|
நிலை | இயங்குகிறது |
பாதுகாப்பு வரையறை | மத்தியச் சிறை |
கொள்ளளவு | 2,200 |
கைதிகள் எண்ணிக்கை | 4,400+ (as of அக்டோபர் 2016) |
திறக்கப்பட்ட ஆண்டு | 2000 |
முந்தைய பெயர் | {{{former_name}}} |
அமைவிடம்
தொகுபரப்பன அக்ரஹார மத்திய சிறைச்சாலை என்றழைக்கப்படும் பெங்களூர் மத்திய சிறைச்சாலை கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு – ஓசூர் சாலையில், ஓசூரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[5]
குறிப்பிடத்தக்க சிறைக்கைதிகள்
தொகுஇச்சிறையில் பல முக்கிய தொழில் அதிபர்களும் அரசியல்வாதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். [6] அவர்களில் சிலர்:
- பி. எஸ். எடியூரப்பா முன்னாள் முதல்வர் கர்நாடகா மாநிலம்
- ஜெனர்தன ரெட்டி, சுரங்கங்களின் அதிபர், கர்நாடகா
- கிருஷ்ணய்ய செட்டி, முன்னாள் அமைச்சர், கர்நாடகம்
- ஜெயலலிதா, முன்னாள் முதல்வர், தமிழ்நாடு
- வி. கே. சசிகலா, பொதுச்செயலாளர், அதிமுக
- ஜெ. இளவரசி, வி. கே. சசிகலாவின் அண்ணன் மனைவி
- வி. என். சுதாகரன், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன்
மேற்கோள்கள்
தொகு- ↑ Sarangi, Debi Prasad (8 August 2010). "Bangalore jail: An island of the unwanted". Deccan Herald. http://www.deccanherald.com/content/86904/bangalore-jail-island-unwanted.html. பார்த்த நாள்: 1 November 2016.
- ↑ David, Stephen (18 November 2008). "Old jail in Bangalore turned into Freedom Park". India Today. http://indiatoday.intoday.in/story/Old+jail+in+Bangalore+turned+into+Freedom+Park/1/20403.html. பார்த்த நாள்: 1 November 2016.
- ↑ "Parappana Agrahara jail: Jailbreak waiting to happen". The Times of India. 2 September 2013. http://timesofindia.indiatimes.com/city/bengaluru/Parappana-Agrahara-jail-Jailbreak-waiting-to-happen/articleshow/22217692.cms. பார்த்த நாள்: 1 November 2016.
- ↑ Yadav, Umesh (26 October 2016). "Jail moves convicts to new building, frees under-trials of stress". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/jail-moves-convicts-to-new-building-frees-under-trials-of-stress/articleshow/55064171.cms. பார்த்த நாள்: 1 November 2016.
- ↑ KNOW BENGALURU'S PARAPPANA AGRAHARA JAIL WHERE SASIKALA WILL BE KEPT
- ↑ "The VIP prisoner of Parappana Agrahara Central Prison". Archived from the original on 2017-02-17. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.