16வது மக்களவை

பதினாறாவது மக்களவைக்கான உறுப்பினர்கள், 2014ஆம் ஆண்டில் பொது தேர்தலின்போது தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் 7, 2014 முதல் மே 12, 2014 வரை ஒன்பது கட்டங்களாக நடத்தியது.[1] தேர்தல் முடிவுகள் மே 16, 2014 அன்று வெளியிடப்பட்டன.

மக்களவை உறுப்பினர்கள்

தொகு

பதினாறாவது மக்களவைக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து 336 உறுப்பினர்களும், தேர்தலுக்கு முன் ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து 59 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகபட்சமாக பாரதிய ஜனதா கட்சியிலிருந்து 282 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியில் இருந்து 44 உறுப்பினர்களும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து 37 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அக்கட்சியிலிருந்து பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நரேந்திர மோடி இந்திய நாட்டின் பதினைந்தாவது பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "General Elections – 2014 : Schedule of Elections" (PDF). 5 மார்ச்சு 2014. Archived from the original (PDF) on 3 ஏப்பிரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச்சு 2014.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=16வது_மக்களவை&oldid=4103264" இலிருந்து மீள்விக்கப்பட்டது