மீ. கல்யாணசுந்தரம்
மீனாட்சிசுந்தரம் கல்யாணசுந்தரம் (அக்டோபர் 20, 1909 - ஜூலை 27, 1988) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளி வடக்கு சட்டமன்றத் தொகுதியில் இருந்து 1952 சட்டமன்றத் தேர்தலிலிலும், திருச்சிராப்பள்ளி-II சட்டமன்றத் தொகுதியில் இருந்து 1962 மற்றும் 1962 தேர்தல்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்துக்க் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2][3] மேலும் கல்யாணசுந்தரம் 1971 முதல் 1976 வரைக்கும், 1977 முதல் 1980 வரைக்கும் மக்களவை உறுப்பினராக இருமுறையும், 1980 முதல் 1986 வரையான காலகட்டத்தில் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். கல்யாணசுந்தரம் கே. லோகாம்பாளை மணந்தார். ஐக்கிய கம்யுனிஸ்ட் என கட்சித் தொடங்கினார்.[4]
மீனாட்சிசுந்தரம் கல்யாணசுந்தரம் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களை) | |
பதவியில் 1980–1986 | |
பிரதமர் | இந்திரா காந்தி ராஜீவ் காந்தி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரித்தானிய இந்தியா, சென்னை மாகாணம், திருச்சினாப்பள்ளி மாவட்டம் (தற்போதைய கரூர் மாவட்டப் பகுதி), குளித்தலை | 20 அக்டோபர் 1909
இறப்பு | 20 சூன் 1988 புது தில்லி | (அகவை 78)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
துணைவர் | கே. லோகாம்பாள் |
தொழில் | அரசியல்வாதி |