திருச்சிராப்பள்ளி-II (சட்டமன்றத் தொகுதி)
திருச்சிராப்பள்ளி-II சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | மீ. கல்யாணசுந்தரம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 31508 | 58.86 | ஜி. இராமசாமி | காங்கிரசு | 17969 | 33.57 |
1957 | மீ. கல்யாணசுந்தரம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 19026 | 43.28 | சுப்புரத்னம் | காங்கிரசு | 15784 | 35.91 |
1962 | மீ. கல்யாணசுந்தரம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 38281 | 55.71 | டி. என். இராசேந்திரன் | காங்கிரசு | 30436 | 44.29 |
1967 | ஆர். நாகசுந்தரம் | திமுக | 26048 | 46.08 | எம். கே. எம். எ. சலாம் | காங்கிரசு | 18842 | 33.33 |
1971 | அன்பில் பி. தர்மலிங்கம் | திமுக | 40593 | 55.74 | சுப்பிரமணியன் | ஸ்தாபன காங்கிரசு | 31295 | 42.97 |
1977 | கே. செளந்தரராஜன் | அஇஅதிமுக | 25405 | 36.37 | எம்.எசு. வெங்கடாசலம் | திமுக | 17523 | 25.09 |
1980 | கே. செளந்தரராஜன் | அஇஅதிமுக | 43029 | 55.52 | எம். கே. காதர் மொய்தீன் | சுயேச்சை | 34467 | 44.48 |
1984 | ந. நல்லுசாமி | அஇஅதிமுக | 46589 | 51.63 | அன்பில் தர்மலிங்கம் | திமுக | 41908 | 46.44 |
1989 | அன்பில் பொய்யாமொழி | திமுக | 40386 | 39.93 | கே. எம். காதர் மொய்தீன் | சுயேச்சை | 30593 | 30.25 |
1991 | ஜி. ஆர். மாலா செல்வி | அஇஅதிமுக | 54664 | 57.18 | அன்பில் பொய்யாமொழி | திமுக | 34120 | 35.69 |
1996 | அன்பில் பொய்யாமொழி | திமுக | 71058 | 68.24 | பி. செல்வராசு | அதிமுக | 26229 | 25.19 |
2000 (இடைத் தேர்தல்) | அன்பில் பெரியசாமி | திமுக | --- | --- | --- | --- | --- | --- |
2001 | அன்பில் பெரியசாமி | திமுக | 56598 | 52.06 | பி. சி. செல்வராசு | காங்கிரசு | 42654 | 39.23 |
2006 | கே. என். நேரு | திமுக | 74026 | --- | எம். மரியம் பிச்சை | அஇஅதிமுக | 57394 | --- |
2011 | ஆர். மனோகரன் | அஇஅதிமுக | 83046 | 54.84% | அன்பில் பெரியசாமி | திமுக | 62420 | 41.22% |
2016 | வெல்லமண்டி நடராசன் | அஇஅதிமுக | 79938 | --- | ஜெரோம் ஆரோக்கியராஜ் | காங்கிரசு | 58044 | --- |
2021 | இனிகோ எஸ். இருதயராஜ் | திமுக | --- | --- | வெல்லமண்டி நடராசன் | அஇஅதிமுக | --- | --- |
இத்தொகுதியில் வென்ற கட்சிகள்
- திராவிட முன்னேற்றக் கழகம் 8 முறை
- அஇஅதிமுக 6 முறை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 முறை
- 1951ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதி திருச்சிராப்பள்ளி வடக்கு என அழைக்கப்பட்டது.
- 1967ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சியின் எம். கல்யாணசுந்தரம் 11638 (20.59%) வாக்குகள் பெற்றார்.
- 1977ல் ஜனதா கட்சி சார்பில் என். கிருசுணன் 16841 (24.11%) & இந்தியக் பொதுவுடமைக் கட்சியின் எம். ஞானம் 9681 (13.86%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் சுயேச்சை இ. வேலுசாமி 18324 (18.12%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் எ. டி. செந்தூரஈசுவரன் 14027 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.